கலீல் ஜிப்ரானின் 100 குட்டிக் கதைகள் மற்றும் கடிதங்கள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
தையல் வெளியீடு’ வெளியிடும் என்னுடைய முதல் நூல் இது.
சென்ற வருடமே இந்தப் பதிப்பகத்தில் என் நூல்கள் வெளிவர வேண்டும் என்று விரும்பினேன். அது இந்த வருடத்தில்தான் சாத்தியமாகி இருக்கிறது.
‘கலீல் ஜிப்ரானின் 100 கதைகள்’ என்ற இந்நூலை மிகவும் ரசித்து. முழுமையான ஈடுபாட்டுடன் நான் மொழி பெயர்த் திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த மிகச் சிறந்த எழுத்து களுக்குச் சொந்தக்காரர் ஜிப்ரான். அவருடைய ஒவ்வொரு நூலையும் படித்து நான் மெய் சிலிர்த்துப் போயிருக்கிறேன், வியந்திருக்கிறேன், என்னை நானே மறந்திருக்கிறேன், கவித்துவ உணர்வில் தேனுண்ட வண்டாக மாறி மயக்கத்தில் இருந்தி ருக்கிறேன். ஆன்மீக வலையில் சிக்கி மகிழ்ந்திருக்கிறேன். அவரின் எழுத்து ஒவ்வொன்றுமே வைரத்தையும் தாண்டி விலை மதிப்புள்ளவை என்பதே என் எண்ணம். வ.உ.சி. நூலகம் வெளியிடும் என்னுடைய முதல் நூலே கலீல் ஜிப்ரானின் நூலாக அமைந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சியும், பொருமையும்தான்.
எங்கோ தடம் மாறிப் போய்க் கொண்டிருந்த என்னை இலக்கியம் என்ற புதிய பாதைக்கு திருப்பி விட்ட என்னுடைய அருமைச் சகோதரர் திரு. இளையபாரதிக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நல்ல நூலை மொழி பெயர்ப்பதற்கான சக்தியை எனக்கு அளித்த இயற்கைக்கு இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி,
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.