குதிப்பி
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
இந்தக் கதையில் சாரதி தொடங்கி அக்காண்டி வரை எவரும் முழுமையாக நல்லவர்கள் இல்லை. கெட்டவர்களும் இல்லை. அவரவருக்கு உரிய குறைகளோடும் நிறைகளோடும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஓரிடத்தில் சாரதியின் கதையாக, மறு இடத்தில் சேதுவின் கதையாக, வளர்மதியின் கதையாக, முஜிபுரின் கதையாக மாறிக் கொண்டே இருக்கிறது. படித்து முடிக்கும்போது இது உங்களின் கதையாகவும் உங்களுக்குத் தோன்றும் அதுவே இக்கதையின் சிறப்பு!
– கரு. பழனியப்பன்
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது. அப்பேச்சு மொழிக்கு இசைவான, நெருக்கமான ஓர் உரைநடை மொழியையே காமுத்துரை நாவல் முழுக்கக் கைக்கொண்டிருப்பது வாசிப்பின் சுவையைக் கூட்டுகிறது.
எப்பவும் எதையுமே காவியப்படுத்திவிடாமல் தெள்ளிய நீரோடை போல வாழ்வை எழுதிச்செல்லும் காமுத்துரையின் கை, இந்த நாவலில் தமிழில் இதுகாறும் பேசப்படாத ஒரு வாழ்வைப் பேசியிருக்கிறது.
– ச.தமிழ்ச்செல்வன்
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Pages | 432 |
| Format | paperback |
| ISBN | 9788199770867 |



Reviews
There are no reviews yet.