கொடுங்காற்றில் ஒரு விளக்கு லல்லாவின் கவிதைகள்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
தேர்வும் மொழிபெயர்ப்பும்: எம்.கோபாலகிருஷ்ணன்
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் படிமங்களும் உவமைகளும் மக்களின் வாழ்வுடன் தொடர்புடையவை. பக்தி இலக்கியத்தில் நமக்குப் பரிச்சயமான சில அம்சங்களையும் இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. வாய்மொழியாக காலங்கள் பல கடந்தபோதும், பல்வேறு மொழிபெயர்ப்பு களினால் ஏற்படும் இடைவெளிகளைத் தாண்டியும், அவர் சொன்ன மூலச் சொற்றொடர்களில் இருந்த செறிவையும் ஆழத்தையும் உணரமுடிகிறது. சமய, மத நம்பிக்கைகளைக் கடந்து மனிதன் தன்னையறிந்து கொள்வதே எல்லோருக்குமான மார்க்கமாக இருக்கும் என்ற மேன்மையான தத்துவத்தை, எக்காலத்துக்குமான பாதையை காட்டுவதாலேயே லல்லாவின் கவிதைகள் அனைவருக்கும் நெருக்கமானவையாக அமைகின்றன.



Reviews
There are no reviews yet.