கொலையுதிர் காலம்
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
கொலையுதிர் காலம் என்ற பெயரைக் கேட்டவுடனே ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்கள் தொலைபேசியில் ‘மேற்கொண்டு எதுவும் சொல்லாதீர்கள். இதுதான் தலைப்பு’ என்று இணைப்பை நீக்கிவிட்டார். அந்த அளவுக்கு இந்தத் தலைப்பு அவருக்குப் பிடித்துப் போயிருந்தது. கணேஷ் – வசந்த் தோன்றும் நீண்ட நாவல்களில் இது முக்கியமானது. இதன் இறுதியில் நீங்கள் எதை நம்புகிறீர்கள் அறிவியலையா, பேய் பிசாசுகளையா என்ற கேள்வி விடையளிக்கப்படாமலேயே இருக்கிறது என்று சிலர் குறைப்பட்டுக்கொண்டார்கள். அந்தக் கேள்விக்கு அடுத்த நூற்றாண்டிலும் அறுதியாக பதில் கிடைக்காது என்பதே எனது கருத்து.
திரு. பாவைசந்திரன் அவர்கள், கொலையுதிர் காலம் நாவலை ஒரு தொலைக்காட்சித் தொடராக சென்னைத் தொலைக்காட்சியின் இரண்டாவது சானலில் அளித்தார். அதில் வசந்தாக நடித்தவர் விவேக்.
கொலையுதிர்காலத்தின் புதிய பதிப்பு பல ஆண்டு களுக்குப் பின் உயிர்மை பதிப்பகத்தாரால் வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 360 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.