சபை நடுவே
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
சிறுகதையோ, புதினமோ, கட்டுரையோ… எதுவாயினும் ஜெயகாந்தனின் பேனாமுனையில் பிறக்கும் போது அதற்கென்று ஓர் உருவமும், உள்ளடக்கமும், உத்தியும், பிரக்ஞையும் வித்தியாசமாக வந்து வாய்த்து விடுகின்றன.
ஜெயகாந்தனின் கதைகளை விடவும், அவருடைய முன்னுரைகள் என்னை அதிகமாகக் கவர்ந்திருக்கின்றன. ஓர் எழுத்தாளன் தன்னுடைய வெவ்வேறு படைப்புகளுக்கு வெவ்வேறு காலங்களில் அவை புத்தகவடிவம் பெறும்போது எழுதித் தந்த முன்னுரைகள் எல்லாம் தொடுக்கப்பட்டு, அவையே ஒரு தனிப் புத்தகமாகத் தமிழில் ஜெயகாந்தனைத் தவிர வேறு எவருடைய பெயரிலும் வந்திருப்பதாக எனக்கு நினைவில்லை.
“ஜெயகாந்தன் முன்னுரைகள்” அதுவே ஓர் அற்புதமான படைப்பிலக்கியம். வாசகனோடு தன் கதை மாந்தர்களுக்காக, அவர்களுடைய போக்குக்காக, நோக்குக்காக நியாயங்கண்டு தர்க்கிக்கும் ஜெயகாந்தனின் வாதங்களில் காணப்படும் அழகும், ஆழமும், வீச்சும் அனுபவிக்க வேண்டிய ஓர் அறிவுச்சுகம்.
– தமிழருவி மணியன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.