சிதம்பர ரகசியம்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
தமிழில்: ப.கிருஷ்ணசாமி
கர்நாடகத்தின் மலைநாட்டுப் பகுதியிலுள்ள கெசரூர் அழகான ஒரு சிறு கிராமம். சுற்றிலும் மலைகளும் காடுகளும் சூழ்ந்தது. ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியின் சமூக அமைப்பும், பண்பாடும் ஏலக்காயைச் சுற்றியே அமைகின்றன. பிரச்சனைகளும் ஏலக்காய் காரணமாகவே எழுகின்றன. எழுந்த பிரச்சனைகளைப் பற்றித் துப்புதுலக்க ஒரு புலனாய்வு அதிகாரி வருகிறார். நாடோடி மக்களின் வாழ்க்கை முறை, கல்லூரி மாணவர்களின் உற்சாகம், ஊரின் ஒவ்வொரு சந்திலும் நெளிந்து திரியும் வகுப்புவாத அரசியல் நச்சுப்பாம்பு, மனசாட்சியுள்ள, ஆனால் தெளிவில்லாத அறிவு ஜீவிகள், சுயநலம் கொண்ட அதிகார வர்க்கம் என இந்நாவல் விரிகிறது.
கர்நாடகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் எழுத்துக்களில் புதிர், இரகசியம், மர்மம் போன்றவை அக்கறையோடு கையாளப்படுகின்றன. அதற்கு இந்த நாவலும் ஒரு சாட்சி. விஞ்ஞானம், தத்துவம், நம்பிக்கைகள், பகுத்தறிவு, தூய அன்பு என்பனவற்றுக்கிடையில் சிக்கித் தவிக்கும் கெசரூர் மக்களின் பரிதவிப்பை ஒரு தனித்தன்மையோடு கூடிய நகைச்சுவையுடன் எடுத்துக் கூறியுள்ளார் தேஜஸ்வி. மூட
நவீன தமிழிலக்கியத்தில் நாட்டமும் அக்கறையும் கொண்ட ப. கிருஷ்ணசாமி, ‘அடிவாழை’ என்னும் சிறுகதைத் தொகுப்பும் ‘விழாக்காலம் மறுபடி பிறந்தது’ என்னும் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். கன்னட இலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருப்பினும் இவருடைய முதல் மொழிபெயர்ப்பான இப்படைப்புக்குச் சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு வழங்கப்பட்டது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.5 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9788126008346 |



Reviews
There are no reviews yet.