சொர்க்கத்தின் பறவைகள்
Original price was: ₹450.00.₹427.00Current price is: ₹427.00.
Description
தமிழில்: லதா அருணாச்சலம்
அபதுலரஸாக் குானாவின் இப்படைப்பு 1994ஆம் ஆண்டு வெளியானது. இந்தக் கதை நடக்கும் காலகட்டம் 1915 1917ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்டது. எண்ணற்ற காலனி ஆதிக்கங்களின் பிடியில் ஆப்பிரிக்க நாடுகள் சிக்கி அவர்களின் அதிகாரப் போர்களுக்கிடையில் தங்களது வளத்தையும் சுயத்தையும் இழக்கத் தொடங்கியிருந்த காலம், காலனித்துவத்தின் அடக்குமுறையையும் வெற்றியையும் அதனால் பூர்வக்குடிகளுக்கிடையே விளையும் அடையாளச் சிக்கல்கள், வாழ்வாதாரத்தின் இழப்புகள், இடம் பெயர்தல், தூத்தும் நினைவுகள், போன்றவையே ஞானாவின் பெரும்பாலான படைப்புகளின் வடிவமும் உள்ளடக்கமுமாக இருக்கின்றன . அந்நியப் படையெடுப்புகளால் அப்படியாகத் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டுக் கொண்டிருந்த கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸான்ஸிபார், டாங்கினிக்கா ஏரிப் பகுதிகளின் (தற்போது தான்ஸானியா) பின்னணியில் நிகழும் வாழ்வியல் முறைமைகள், மனமாயங்கள், கனவுகள், கடந்த காலத்துடனான போராட்டங்கள், பொருளாதாரப் போதாமை, அடிமை வணிகத்தின் எச்சங்கள், ஆழமனதில் தேக்கி வைத்த விடுதலை வேட்கை, நிறைவேறாமல் போகும் துயர்மிகு காதல ஆகியவற்றின் செழுமையான சித்திரமாக விரிகிறது சொர்க்கத்தின் பறவைகள்.
புதிய சூழலில் தங்களுடைய அடையாளத்தைக் கட்டமைப்பதற்காக வேறு வழியின்றி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் சமரசம் செய்து கொள்ளும் பல கதை மாந்தர்களை இப்புதினத்தில் ஞானா படைத்திருக்கிறார். சிதைந்துபோன பூர்வ நினைவுகளின் தாக்கத்தில் வெளிப்படும் இயலாமையின் கொந்தளிப்புகளுடனேயே அறிமுகமற்ற நில அமைப்புக்கும் சமூகச் சூழலுக்கும் அவர்கள் தங்களைப் பொருத்திக் கொள்ள முயல்கின்றனர்.
அப்துல்ரஸாக் குானாவின் மொழிநடையும் அவர் தேர்ந்து கொண்ட அரேபிய, விவிலியக் குறியீடுகளும் பெயர்களும் பலவேறு கூறுகளை உள்ளடக்கிய வடிவமும் உரைநடையின்பால் அவருக்கிருந்த ஆழ்ந்த ஞானமும் நூலில் சிறப்பாக வெளிப்படுகிறது. அதன தாக்கத்தில் நமக்குக் கிடைத்திருப்பது நாம் இதுவரை அறிந்திராத நிலத்தின் அரியவகைப் படைப்பான சொர்க்கத்தின் பறவைகள்.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 312 |
| Format | paperback |
| ISBN | 9788119576340 |



Reviews
There are no reviews yet.