சொல்ல முடிந்த வார்த்தைகள்
Original price was: ₹30.00.₹28.00Current price is: ₹28.00.
Description
என் முதல் ஆசிரியரை நினைக்காமல் இந்தக் கட்டுரையை என்னால் தொடங்க முடியாது. அந்தக் கால வழக்கப்படி தேங்காய், பூ, பழங்கள், வெற்றிலைப் பாக்கு, பணம் வைத்த தட்டுடன் அம்மாவின் பின்னால் பதுங்கியபடியே தலைமையாசிரியரின் வகுப்பிற்கு நடந்து செல்கிறேன். காது எட்டுகிறதா என்று பார்த்தபடி சில கேள்விகள் கேட்டு என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள் ஒண்ணாங்கிளாசில் கொண்டுபோய் விடுவதற்காக அம்மா கூடவே வந்தபோது டீச்சரைப் பார்த்து நான் இன்னும் பயந்துபோகிறேன். நல்ல அடர் கறுப்பில் கருநீலப் புடவை கட்டி ரிங் கொண்டை போட்ட டீச்சர் என்னை மிகவும் பயமுறுத்தினார். நான் கறுப்பு டீச்சர் வகுப்பில் படிக்கவே மாட்டேனென அடம்பிடித்து அழுது புரண்டேன். என் அழுகையின் தீவிரம் பார்த்துப் பக்கத்து வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அங்கிருந்த ஒரு வெள்ளை டீச்சர் என் பாட்டியைப் போலிருந்ததால் என் அழுகை மட்டுப்பட்டது. வெள்ளை டீச்சர் கிளாஸுக்குப் போன பிறகுதான் கைகளில் எத்தனை முட்டி இருக்கிறதென்பதே புரிய ஆரம்பித்தது. அது வேறுவகையான சோகம். கறுப்பு டீச்சர் என்று ஒரு ஆசிரியரின் மனதை எவ்வளவு புண்படுத்தியிருக்கிறேன் என்று நான் யோசித்ததேயில்லை.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.7 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 24 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.