ஜென் தத்துவ விளக்கக் கதைகள்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
கிழக்குத் தேசங்களில் ஜப்பான் ஒரு விசேஷ பூமி. எரிமலைகள், பூகம்பங்களுக்கு நடுவே, அமைதி தவழும் மூங்கில் வீடுகளில் புத்தரை சேவித்தபடி மரபான வாழ்வு ஆனாலும் சோனி, டயோட்டா, சுசுக்கி என்று நவீன வாழ்வுக்கும் பங்களிப்பு.
இந்திய பௌத்தத்திலிருந்து சாறெடுத்ததே ‘ஜென்’ தத்துவம். இயல்பிலேயே ஜப்பானிய சிந்தனை மரபு செழுமிய அம்சங்களைக் கொண்டது வந்த விருந்தின ருக்கு டீ தருவதைக்கூட மனம் ஒன்றும் மோன நிகழ் வாக்குவது; மூத்தோரை நிலம் தொட குனிந்து வணங்கு வது: கெளரவம் பங்கமானால் ‘ஹராகிரி’ செய்து மரிப்பது; கவிதை யாத்தாலும் ஹைகூ, சென்ரியு என்று புதிர் புனைவது; 21 ஆம் நூற்றாண்டிலும் மன்னர் பரம் பரைக்கு தேவதா விசுவாசமளிப்பது என்று தொடரும் நீட்சியில் ‘நான் யார்’ தேடலிலும் ஜென் தத்துவ சிந்தனை ஜப்பான் உலகுக்கு வழங்கிய ஆன்மீகக் கொடை
மேலைநாட்டு தத்துவவாதிகளும் தவிர்க்க இயலாமல் தஞ்சமடைகிற ஜென் மார்க்கம் மிகக் கடினமாக தோற்றம் தருகிற ஒரு எளிய வஸ்து.
‘ஸ்ரீ பாதுகா ஸகஸ்ரம்’ என்கிற வைணவ பக்திக் காவியத்தில் காவிரி நதி, அரங்கன் கால்பட்ட ஆற்று மணல் வெளியில் முங்கி எழுந்து குளிக்கிறது என்று ஒரு உவமை வரும். ஜென் தத்துவத்தை அறிய புகுவோருக்கும் இப்படி ஒரு பரவச நிலை வரலாம். ஜென் தத்துவத்தை நாம் பயிலுகிறோமா, இல்லை மனித சிந்தனை உச்சங்களை ஜென் பயின்றபடி நம் கைபிடித்து முன்னே செல்லுகிறதா?
எதுவானாலும் இந்நூல் உங்களுக்கு வாழ்வுப் புரிதலைத் தரும் படியுங்கள், பயனடைவீர்கள்!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 192 |
| Format | paperback |
| ISBN | 9789386209474 |



Reviews
There are no reviews yet.