தாகூர் கதைகள்

Original price was: ₹260.00.Current price is: ₹247.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: மு.சிவலிங்கம்

இரவீந்திரநாக தாகூர் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருவது இவர் ஒரு கவிஞர் என்பதுதான் இவர் ஓர் அற்புதமான கதாசிரியரும்கூட இவருடைய படைப்பாற்றலின் இன்னொரு பரிமாணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது, தாகூர் கதைகள் இதில் இடம்பெற்றுள்ள 13 கதைகள், மனித நேய மகத்துவத்தை, வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் நமக்குள்ளே ஒரு தேடல் தாகத்தையும் கிளப்பிவிடும் வகையில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன.

ஒரு சில நிமிடக் கவனக் குறைவால், எஜமானரின் குழந்தையைப் பறிகொடுத்துவிட்ட விசுவாசமான வேலைக்காரன், ஒரு பிராயச்சித்தம் தேடினான், எஜமான் குடும்பம் இழந்ததை மீட்டுக் கொடுத்ததற்காக இந்த அப்பாவி ஜீவன் கொடுத்த விலை…?
கனம் கோர்ட்டார் அவர்களே.. கதை சொல்லும் அதை!

புனிதராகக் காட்டிக்கொண்டு, அருள் மொழிகளை உபதேசித்து வந்த ஒரு கபடச் சாமியார், தனது பக்தை ஒருத்திக்கு வஞ்சக வலை விரித்தார். குடும்பத்தலைவியான அந்தச் சராசரிப் பெண்ணோ, நிஜமான துறவுக்கு இலக்கணமாகப் புது வாழ்க்கையைத் தொடங்கினாள். முடிவில்லாத தேடல் பயணத்தைத் தொடர்ந்த அவளின் வாழ்க்கை நாடகத்தில் எத்தனை எத்தனை காட்சிகள்…..? பக்தை கதையில் பாருங்கள்.

விஷமத்தனமும் கும்மாளமுமாகக் கொட்டமடிக்கும் சின்னப் பையனுக்கு, கடுமையான கண்டிப்பான அம்மா கொடூரமானவளாகத் தெரிகிறாள். பெற்ற தாயைப் பிரிந்து சென்ற பிறகு, அவள் மடிதான் சொரக்கம் என்பதை அருமை மகன் உணரும் நெகிழ்ச்சியான கதை, லீவு விட்டாச்சு…

கண்ணுக்குக் கண்ணான கண்ணாளனே, தன் கண்கள் பறிபோனதற்குக் காரணமானவன் என்பதைத் தெரிந்துகொண்டும், அவன் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாத ஓர் அபலைப் பெண்ணின் உருக்கமான கதை. கண்கள் திசை மாறிப் போகவிருந்த கணவன் இவள் அன்புக்கு அடிமையான மாயம் நிகழ்ந்தது எப்படி? கண்கள் சொல்லும், அந்த ரகசியத்தை!

Rabindranath Tagore, Sivalingam, Kannadasan Pathippagam

Additional information

Weight 0.25 g
Dimensions 1.2 × 13 × 20 cm
Author Name

Publisher

Pages

238

Format

paperback

ISBN

9788184021400

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தாகூர் கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories