தினம் ஒரு உயிர்
Original price was: ₹390.00.₹370.00Current price is: ₹370.00.
Description
தினம் ஒரு உயிர்!
இந்தத் தலைப்பைக் கேட்டதும் சரியான தடாலடி மர்மக் கதையாக இது இருக்கும் என்கிற ஒரு எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் மிக நல்லது என்கிற எண் ணம்கூட இந்தத் தலைப்பை நான் அமைக்க ஒரு காரணம்.
இன்றைக்கு புத்தகம் படிப்பவர்கள் அருகி வருகிறார்கள். ஆனால் தொலைக்காட்சி, சினிமா போன்ற ஒளிப்புனலைப் பார்ப்பவர்களோ பெருகி வருகிறார்கள். படிப்பது என்பது நாமாகப் பிசைந்து நமது கைகளால் முயன்று சாப்பிடுவது போன்றது. பார்ப்பது என்பது அப்படி இல்லை. அது கிட்டத்தட்ட ஊட்டப்படும் சோறு. நாம் கண்ணைத் திறந்து கொண்டிருந்தாலே போதும். அதன் வழியாகக் கதையானது காட்சிப் பொருளாகவே உள்ளே நுழைந்து நம்மை ஆக்ரமித்துக் கொண்டு விடும். 1990க்கு முன் வரை இந்த ஊடகங்கள் தமிழகத் தில் இல்லாத நிலையில் நம் சமுதாயம் பொழுதுபோக்கு விஷயத் தில் ஊட்ட ஆளில்லாத நிலையில் தானாகவே பிசைந்து முயன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. (அதுதான் நல்லதும்கூட) பின்னாளில் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. இன்றைக்கு ஒன்றுக்கு நாற்பது சேனல்கள். அதில் 24 மணி நேரமும் நம்மை அப்படி இப்படி நகரவிடாதபடி காட்சி ஓட்டங்கள்.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 376 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.