திருப்புகழ் (6 பகுதி)- மூலமும் உரையும்
Original price was: ₹2,200.00.₹2,090.00Current price is: ₹2,090.00.
Description
உரையாசிரியர்: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்பர். ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை.
நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார், “மறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற, முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க, மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார் அருணகிரிநாதர்.
திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழி இலக்கியத்திலுமில்லை என்றால் அது மிகையில்லை. விந்தையான சந்தம் கொண்டு கேட்பவர் தம் சிந்தை கவர்வது “திருப்புகழ்”.
Additional information
| Weight | 3.6 g |
|---|---|
| Dimensions | 16.5 × 14.6 × 22.4 cm |
| Author Name | |
| Pages | 2432 |
| Format | Hard cover |















Reviews
There are no reviews yet.