துயரங்களில் மலரும் புன்னகை

Original price was: ₹160.00.Current price is: ₹152.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ஜெகநாத் நடராஜன்
பிரான்சில் பிறந்து போலந்தில் வளர்ந்த ரோமன் போலன்ஸ்கி திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்ற பல்வேறு முகங்கள் கொண்ட ஆளுமை. இரண்டாம் உலகப் போருக்கு சில வருடங்களுக்கு முன் பிறந்த அவர், மிகவும் கடினமான குழந்தைப் பருவத்தைக் கடந்தார். ஹிட்லரின் வதை முகாமில் அவரது தாயார் இறந்தார். அவரது தந்தை நாஜி படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாமில் அடைக்கப் பட்டபின் அனாதையாக தெருக்களில் அலைந்தார். பிச்சை எடுத்தும், சிறு திருட்டுகள் செய்தும், யாரென்று தெரியாதவர்களின் பராமரிப்பிலும் வளர்ந்தார். வாழ்ந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் எண்ணற்ற வேலைகளைச் செய்தார். தனது 12 வயதிற்குள்ளெல்லாம் போரின் கொடூரங்களைக் கண்டார். மூர்க்கமாகத் தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், உயிர் பயத்திலும் வாழ்ந்தார். சிறுவனாக இருந்தபோதே அவர் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார், வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களிலிருந்து தப்பிக்க இலவசமாக கிடைத்த நாஜி எதிர்ப்பு பிரச்சார திரைப்படங்களை ஒளிந்திருந்து பார்த்து, தன் திரைப்பட ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். போருக்குப் பிறகு அவர் உயிர் தப்பி வந்த தனது தந்தையுடன் இணைந்தார், போலந்தில் உள்ள தேசிய திரைப்படப் பள்ளிக்குச் சென்றார். அவரது முதல் போலந்து திரைப்படமான நைஃப் இன் தி வாட்டர்’ சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது, இது அவருக்கு பெயரையும், பரந்த பார்வையாளர்களையும் கொடுத்தது. இங்கிலாந்திலும், பிரான்சிலும் திரைப்படங்களை இயக்கியபின் அமெரிக்காவில் கிளாசிக் ஹாரர் வகை திரைப்படமான ‘ரோஸ்மேரிஸ் பேபி’ மூலம் அறிமுகமானார்.

thuyaram, thuyarangal, malarum,. mallarum, punagai, punnagai, roman, polanski, polanskei

Additional information

Weight 0.15 g
Dimensions 0.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

102

Format

paperback

ISBN

9788190789141

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “துயரங்களில் மலரும் புன்னகை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories