நட்பின் இலக்கணம் நா.முத்துக்குமார்
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
பறவை பறந்தபின்னும் நடனம் நிறுத்தாத கிளைகளில் இலையின் மகிழ்ச்சியை காட்டியவன் அவன் இடிவிழுந்த வீட்டுக்குள் பூச்செடியை காண்பித்து எத்தனையோ எழுதப் படிக்கத்தெரியாத பாமர இதயங்களுக்குள் நம்பிக்கை நீர் ஊற்றி வாழ்தலின் இச்சையை தூண்டியவன். ஒரு தந்தை மகளுக்கு பாடுவதைப்போல ஒரு ஆனந்த யாழை வைரமுத்துவோ கண்ணதாசனோ கூட மீட்டவில்லை. அந்த பாட்டுக்கு கண்ணீர் விடாத மகளைபெற்ற அப்பாக்கள் யாரும் இருக்க முடியாது. இத்தனைக்கும் அந்த வரிகளில் வார்த்தை ஜாலமோ வர்ணனையோ எதுவுமில்லை. நேரடி உணர்வுகள் அப்படியே பனிகுச்சிகள்போல இதயத்துக்குள் ஊடுருவி நமக்குள் கண்ணீராய் கன்னத்தில் உருளவைத்த அதிசயம் அவை.
காதல் படத்தில் வரும் ‘உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்’ இரண்டு வரிக்குள் சொன்ன ஆழமான உணர்வும் எளிமையும்தான் அவனது பலம் அதே பாடலில் மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும் காலம் எனும் ஒரு வரி காட்சி படிமம்தான் எத்தனை சேதிகளை நமக்கு கடத்தி விடுகிறது? நகரங்களில் வாழ வழியற்று இண்டு இடுக்குகளில் வாழ நேரும் அவலம் மட்டுமல்லாமல் அப்படியும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை கட்டி நம்மை போராட்டத்துக்கு தயார்படுத்தும்போது, அந்த சினிமா பாடல் எளிய மனிதனுக்கு உன்னத இலக்கியமாகிவிடுகிறது.
– அஜயன்பாலா
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 108 |
| Format | paperback |
| ISBN | 9788197243813 |



Reviews
There are no reviews yet.