நீர்வழிப் படூஉம்
Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
Description
தமிழ் நாவல்களில் இதுவரை இடம்பெற்றுள்ள கதைமாந்தர்களில் தனித்துவமான ஒருவர் எனக் காருமாமாவைச் சொல்ல முடியும். வரவிருக்கும் தலைமுறைகளாலும் மறக்கமுடியாததாகத் திகழவிருக்கும் காருமாமாவின் மரணத்தோடு நாவல் தொடங்குகிறது. காருமாமா என்னும் ஒற்றை மனிதனை மையமாக வைத்தே நாவல் பின்னப்பட்டிருந்தாலும் அவர் சார்ந்த, அவர் வாழ்ந்துவந்த குடிநாவிதச சமூகத்தின் மற்ற எல்லா மனிதர்களின் கதைகளாகவும் விரிந்து செல்கிறது இம்மகத்தான படைப்பு. தகிக்கும் வறுமையில் வாழ்வை எதிர்கொள்ளத் திணறிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்களின் முரட்டுத்தனத்துக்குள்ளும் மூர்க்கமான தோற்றத்துக்குள்ளும் அவற்றின் ஆழங்களில் உலர்ந்துபோகாமலிருக்கும் ஈரத்தைத் தொட்டுப்பார்க்கிறது. அதை மீட்டெடுக்க முயல்கிறது. வெந்து தணிந்த வாழ்நிலத்தில் அன்பும் மானுடப் பண்புகளும் துளிர்விடுகின்றன. துணைப்பாத்திரங்கள் என எதையுமே ஒதுக்கிவிட முடியாதவாறு கைவிடப்பட்ட தமிழகக் கிராமமொன்றின் தூர்ந்துபோன பெருவாழ்வின் அறைந்து சாத்தப்பட்ட கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்துகாட்டுகிறது. அவ்வளவு எளிதாகக் கடந்துசென்றுவிட முடியாத நாவலின் பல பகுதிகள் நம்மை ஸ்தம்பிக்க வைத்துவிடுகின்றன.
தேவிபாரதியின் இந்த நாவலை முன்வைத்து இரண்டு விஷயங்களைத் தயக்கமில்லாமல் பிரகடனம் செய்துவிடலாம். தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக ‘நீர்வழிப் படூஉம்’ எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பது முதலாவது. சமகால உலக எழுத்தாளர்களின் வரிசையில் நாம் பெருமிதத்தோடு வைத்துப் பார்க்கத்தக்க இன்றைய தமிழ் எழுத்தாளர் தேவிபாரதி என்பது இரண்டாவது.
– ஜி.குப்புசாமி
Additional information
| Weight | 0.27 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN | 9788194467946 |



Reviews
There are no reviews yet.