பத்ம வியூகம் மகாபாரதக் கதைகள்
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
இந்தக் கதைகள் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்து எழுதப்பட்டவை, சிறுகதைகள் நாடகங்கள் என்னும் வடிவில். வெண்முரசு என்னும் பெருநாவல் தொடரை எழுதும் கனவுடன் ஜெயமோகன் இருந்த நாட்களில் வெவ்வேறு கோணங்களில் எழுதியவை இவை. மகாபாரதத்தின் அடிப்படை உணர்வு நிலை என்பது நாடகீயமானது. அதனூடாக கவித்துவத்தையும் மானுட தரிசனத்தையும் முன்வைப்பது. ஆகவே இயல்பாகவே அதன் எப்பகுதியும் தீவிரமான நாடகமாக ஆகத்தகுந்தது.
இத்தொகுதியில் வடக்கு முகம், பதுமை எனும் இரு நாடகங்கள் உள்ளன. மகாபாரதத்தின் பல புள்ளிகள் வாழ்வின் முரண்களை தரிசன முரண் உச்சங்களைக் காட்டுபவை. அவை இயல்பாகவே சிறுகதைத்தன்மையை அடைபவை. 1988ல் காலச்சுவடு இதழில் ஜெயமோகன் எழுதிய திசைகளின் நடுவே அவருடைய முதல் மகாபாரதச் சிறுகதை. பெரும் புகழ் பெற்ற அச்சிறுகதையும் பிற சிறுகதைகளும் இந்நூலில் உள்ளன. மகாபாரதத்தை நோக்கிய ஜெயமோகனின் பயணத்தை அறிந்துகொள்ளவும் மகாபாரதத்தின் தரிசனத்தையும் உணர்வு நிலைகளையும் நவீன வாசிப்பினூடாக அணுகிச்செல்லவும் உதவும் படைப்புகள் இவை.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 304 |
| Format | paperback |
| ISBN | 9789392379970 |



Reviews
There are no reviews yet.