பறம்புத் தலைவன் பாரி
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
ஒரு கலாச்சாரத்தின் வேர்களாய் பரிணமிப்பவை கதைகள். அந்த வேர்களில் பயணித்தே மலர்களையும், கனிகளையும் சென்றடைய இயலும், அதிலும் சரித்திரக் கதைகள் ஆணிவேரைப்போல. அவற்றில் நம்மை நாமே கண்டுணர முடியும்.
தமிழில் சிறந்த சரித்திரப் புதினங்களைப் படைப்பதில் இணையற்ற பேராளுமைகளான சாண்டில்யன், கல்கி, சு.வெங்கடேசன் போன்றவர்களின் வரிசையில் அடுத்து வந்திருக்கும் திரு அசோக்குமார் எழுதி, சென்ற ஆண்டில் வெளியான சோழவேங்கை கரிகாலன் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று மூன்று விருதுகளையும் அள்ளிச் சென்றது. அதைத் தொடர்ந்து இவர் எழுதிய இமயவேந்தன் கரிகாலன் தமிழ் இலக்கியத்தில் இவருக்கென தனித்த இடத்தை உறுதி செய்தது.
தனக்கென தனித்த நடையை உருவாக்கி அதில் சங்க காலத் தகவல்களையும், தமிழின் மேன்மையையும், சிறந்த கருத்துகளையும் உட்புகுத்தும் நுட்பம் இவருக்கு கை சேர்ந்துள்ளது. காட்சிகளைக் கண்முன்னே நிகழ்த்தும் வித்தையை இவருடைய சொற்கள் புரிகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கும் கவிநயமான சொற்கள் படிப்பதின் சுவையைக் கூட்டுகின்றன. மொழியின் வழித்தடத்தில் கால்பதிக்க வந்துள்ள அவருடைய மூன்றாவது நாவலே பறம்புத் தலைவன் பாரி. படிப்பவர்களின் மனதை மயக்கி எழுத்தெனும் மாய உலகுக்கு இந்நாவல் அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 1.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 344 |
| Format | paperback |
| ISBN | 9788184463439 |



Reviews
There are no reviews yet.