பிறகு
Original price was: ₹240.00.₹228.00Current price is: ₹228.00.
Description
பிறகு பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதுடன், தமிழில் எழுதப்பட்ட நவீனச் செவ்விலக்கியப்பிரதிகளில் ஒன்று என்றும் இன்று பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது.
பூமணியின் சமகாலம் என்பது தமிழில் முற்போக்கு யதார்த்தவாதத்தின் முக்கியமான ஆக்கங்கள் வெளிவந்த காலகட்டமாகும். ‘பிறகு அந்த வரிசையைச் சேர்ந்த ஒரு படைப்பாகவே தமிழில் முன்வைக்கப்பட்டது. அந்தப் பின்புலத்தில் இருந்து தன்னுடைய தனித்தன்மையால் தன் இடத்தைக் கண்டடைந்து கொண்டது அது.
பிறகு ஒரு வரலாற்று நாவலும் கூட. எல்லா இலக்கியங்களும் மாற்று வரலாறுகளே என்பார்கள். ஒரு சம்பிரதாயமான வரலாற்றுச் சித்திரத்தால் விட்டுவிடப்படும் நுண்ணிய வாழ்க்கைக்கூறுகளை எழுதிச் சேர்ப்பதையே எல்லா இலக்கியங்களும் செய்கின்றன. ஆனால் ‘பிறகு’ வரலாறோ மொழியோ சென்று தொடாத ஆழத்தில் வாழும் ஒருவரைக் கதாநாயகனாக்குகிறது. அதன் வழியாக வரலாற்றால் எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப்படாத ஓர் அடித்தள வரலாற்றை எழுதி முன்வைக்கிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் கரிசலின் கிராமச்சூழலில், அடித்தள மக்களின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் இந்நாவலில் கூறப் படுகின்றன.
நாவல் முழுக்க இந்த செவ்வியல்தன்மை கொண்ட நிதானம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அழகிரிக்கும் கந்தையா நாயக்கருக்குமான உறவுதான் இந்நாவலின் செவ்வியல் தன்மையைக் கடைசி வரிவரை நிலைநிறுத்தும் அம்சம் என்று சொல்லலாம்.
‘சாமி’ என்றுதான் அழகிரி சொல்கிறார். ‘அடேய்’ என்றுதான் நாயக்கர் அழைக்கிறார். அதைமீறி அவர்கள் நடுவே ஒரு சமநிலை நிலவிக்கொண்டே இருப்பதை நாம் உணரமுடிகிறது. கந்தையா நாயக்கரின் மரணப்படுக்கையில் அழகிரி அவரைச்சென்று சந்திக்கும் இடம் தமிழ் நாவல்களின் நுட்பமான காட்சிகளில் ஒன்று.
– எழுத்தாளர் ஜெயமோகன்
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.3 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 216 |
| Format | paperback |
| ISBN | 9788169328135 |



Reviews
There are no reviews yet.