புதுமைப்பித்தன் கதைகள்
Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Description
புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையையும் இதுவரை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்பதற்குக் கணக்கே கிடையாது. ஆனால், பதிப்பிப்பதற்காக வாசித்தது முந்தைய எல்லா வாசிப்பையும்விட வெகுகொண்டாட்டமாக இருந்தது. என் தந்தை உயிரோடு இருந்தபோது நான் பிறந்த கிராமமும் எங்கள் வீடும் உலகிலேயே எனக்கு மகிழ்ச்சிக்குரிய இடங்கள். அந்தத் தொலைந்துபோன பால்ய, இளமைக்கால மகிழ்ச்சியைப் புதுமைப்பித்தன் கதைகள் மீண்டும் எனக்குத் தந்தன.
சமீபத்தில் வரும் பல புதுமைப்பித்தன் தொகுப்புகளில் ‘சிற்றன்னை’ குறுநாவல் இருப்பதில்லை. ‘சிற்றன்னை’ புதுமைப்பித்தனின் அபூர்வமான கதை. புதுமைப்பித்தன் நாவல் எழுதாத குறையைத் தீர்த்த குறுநாவல்.
தமிழின் மகத்தான திரைப்படங்களில் ஒன்றான இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப் பூக்களி’ன் மூலக்கதை சிற்றன்னைதான். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சிற்றன்னை குறுநாவல் எவ்வாறு ‘உதிரிப் பூக்கள்’ ஆக உருமாற்றம் அடைந்தது என்பது பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்.
Additional information
| Weight | 0.9 g |
|---|---|
| Dimensions | 3.8 × 14.6 × 22.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 688 |
| Format | Hard cover |
| ISBN | 9788194966104 |



Reviews
There are no reviews yet.