புத்ர
Original price was: ₹220.00.₹209.00Current price is: ₹209.00.
Description
ஒரு குடும்பத்தின் மீது நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் இந்த நாவலின் மையம். இந்தச் சாபத்தின் காரண காரியத்தைத் தேடிச் செல்லும் பயணமே நாவலின் கதைப்போக்கு. தாயின் வயிற்றில் இருக்கும் சாபம் பெற்ற கருவின் விவரிப்பில் தொடங்கும் கதை பல்வேறு தன்னிலைகளின் கூற்றாகப் பல திசைகளில் கிளை பிரிந்து செல்கிறது. தொன்மங்கள், ஐதீகங்கள். சமூக யதார்த்தங்கள், மனித இயல்புகளின் விசித்திரச் சுழிப்புகள் எனப் பலவற்றையும் தழுவியபடி செல்கிறது இந்த நாவலின் கதையாடல்
கவித்துவமும் மொழியின் மந்திர ஜாலங்களும் கொண்ட லா.ச. ராமாமிருதத்தின் நடையழகு அசாத்தியமான ஈர்ப்பைக் கொண்டது.கதை, கதைப்போக்கு, கதை மாந்தர்கள், கதையில் வெளிப்படும் பார்வை ஆகியவற்றைக் காட்டிலும் லா.ச.ரா.வின் மொழி வாசகர்களைக் கூடுதலாக வசீகரிக்கிறது. மொழி தன்னளவில் ஓர் இலக்கிய அனுபவமாக மாறும் மாயம் இவரது எழுத்தில் சாத்தியமாகிறது. தரையை விட்டுச் சில அடிகள் மேலே மிதக்கும் லா.ச.ரா.வின் கதையுலகம். மயக்கும் அவரது மொழி, கதையாடலில் வெளிப்படும் அற்புதத் தருணங்கள் ஆகியவை கொண்ட நாவல் இது
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9789352440078 |



Reviews
There are no reviews yet.