பொருள் மதிப்பு வாழ்வு
Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.
Description
நமது அனுபவக் குவியலின் ஒரு கண்ணாடியை அணிந்துகொண்டு, அறிவின் துலாக்கோல்களைக் கையிலெடுத்து ஓர் இசைக் கோர்வையோடு நம்மைப் பிணைத்துக்கொள்ளத் துவங்கினால் நாம் எப்போதுமே இசைக்கு அந்நியமானவர்களாகும் சாத்தியமும் உண்டு.
நாம் வெறுப்பின் காலத்தில் வசிக்கிறோம் என்பதன் பொருள், வெறுப்பு புதிதாகத் தோன்றி இப்போது அதன் ஆளுகைக்குக் கீழே நம்மைக் கொணர்ந்திருக்கிறது என்பதல்ல. சமூகத்தின் பல்வேறு அங்கங்களின் ஏற்பை (Legitimized) வெறுப்பு பெற்றிருக்கிறது என்பதே அதன் பொருள்.
நம்மீது ஓயாது மோதும் தகவல் அலைகளில் நோய்மையும் மரணச் செய்தியுமே நிரம்பியிருக்கிறது. நாம் இவற்றை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தீயவற்றைப் பார்க்காமல், கேட்காமல், பேசாமல் இருக்கலாம். ஆனால் தீயவற்றால் தாக்குறாமல் நம்மால் ஒருநாளும் இருக்க முடியாது
* பொருட்களின் நீண்ட கால வாழ்வு மதிப்பு மிக்கதாக இருந்தது போய் குறுகிய கால இருப்பே அதன் மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது. காலத்தின் வேகத்தை இந்தக் குறுகிய காலமே தாக்குப் பிடிக்கும் பொருட்களின் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம்.
காந்தி அவரது செய்தியாக தனது வாழ்க்கை இருக்கும் எனச் சொன்னார். ஆனால் காந்தியின் மரணம் அவரது வாழ்வை விடவும் மகத்தான செய்தி. அதனை உள்வாங்கி, சிந்திந்து, செயலாற்ற வேறு பொருத்தமான காலம் இப்போதிருப்பதைப் போலக் கனிந்திருக்காது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 270 |
| Format | paperback |
| ISBN | 9788198229823 |



Reviews
There are no reviews yet.