ப.சிங்காரம் நாவல்கள்கடலுக்கு அப்பால் புயலிலே ஒரு தோணி
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
ப.சிங்காரம் நாவல்களுக்கும் நற்றிணைக்கும் ஓர் உணர்வுப் பூர்வமான தொடர்பு உண்டு. பெரும் வெற்றி பெற்று நற்றிணையை நிலை நிறுத்திய நூல் ப. சிங்காரம் நாவல்கள் ஆகும்.
ப. சிங்காரத்தின் நாவல்களை முதலில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. அடுத்து தமிழினியில் வெளிவந்தது. மூன்றாவதாக நற்றிணை பதிப்பித்தது. ஆனால் இப்போது புதுமைப்பித்தன் கதைகள் போன்று அதிக பதிப்பகங்கள் பதிப்பிக்கும் புத்தகமாக ப. சிங்காரம் நாவல்கள் மாறிவிட்டது. ப. சிங்காரம் இதைப் பார்த்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார். அவர் தான் எழுதிய நாவல்களைப் பதிப்பிக்கப்பட்ட பாடே அவரை அடுத்து எழுதவிடாமல் தடுத்துவிட்டது என்று வாசகனாக நாம் குறைபட்டுக் கொண்டாலும், நூறு நாவல்கள் எழுதி எய்தவேண்டிய பெரும் புகழை இரு நாவல்களிலேயே அடைந்துவிட்டார் என்று மன ஆறுதலும் அடையலாம்.
நம் இதயம் என்றும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டும் என்றால் ப. சிங்காரத்தின் நாவல்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாலே போதும்.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 416 |
| Format | paperback |
| ISBN | 9788192366821 |



Reviews
There are no reviews yet.