மிஷன் தெரு
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
மிஷன் தெரு எஸ்தரின் கதை. துடுக்கான, தைரியமான, அறிவான, அழகான, அபூர்வமான எஸ்தர் சுதந்திரமாக வாழ முற்படும்போதெல்லாம் தோற்கடிக்கப்படும் கதை. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வாய்மொழி கதையாடல்களாகவே புழக்கத்திலிருக்கும் “Taming of the shrew” வகைமை கதை. பெண்களை “அடக்க” “நல்வழிப்படுத்த” “கீழ்ப்படியவைக்க” “சொந்தமாக சிந்திக்கும் திறனை மரத்துப்போகச் செய்ய””பக்குவப்படுத்த” உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் விதவிதமான வன்முறைகளைப் பிரயோகிப்பதை தான் “Taming of the shrew” என்பார்கள்.
ஷேக்ஸ்பியர் எழுதி அதை இலக்கியமாக்க, இன்றுவரை அந்த மரபு உலகின் எல்லாப் பண்பாடுகளிலும், நாடகங்களாக திரைப்படங்களாக நாவல்களாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. தமிழ்த் திரைப்படங்களில் இன்றுவரை சுய சிந்தனையுள்ள “திமிரான” பெண்கள் வன்புணரப்பட்டே “பாடம்” புகட்டப்படுகிறார்கள். பிரகாஷின் எஸ்தரும் அவ்வாறே வீழ்த்தப்படுகிறாள். சிறகுகள் நறுக்கப்படுகிறாள். தன்னைத்தானே தூர்ந்துப் போகவிட்டு சிதிலமாக்கி இடித்துக் கொள்ள தள்ளப்படுகிறாள். பெண்ணின் அழகு துய்க்கப்படுவதும், அறிவு தண்டிக்கப்படுவதும்தான் உலக நியதி என்று வீடும், பள்ளிக்கூடமும், தேவாலயமும், தெருவும், ஊரும் எஸ்தரை மீண்டும் மீண்டும் ரணமாக்கி நிரூபிப்பதே “மிஷன் தெரு”
– கவிஞர் லீனா மணிமேகலை.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 116 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.