மிஸ் யூ… இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
Original price was: ₹3,000.00.₹2,775.00Current price is: ₹2,775.00.
Description
இந்த முறையும் இதற்குமேல் எதுவுமே சொல்ல முடியாமல் போனதால்தான் அதற்குப் பதிலாக இவ்வளவு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டின் பிரியத்தின் பரிதவிப்பையும் கேவல்களையும் இந்தத் தலைமுறையின் அந்தரங்க உலகின் காட்சிகளையும் இக்கவிதைத் தொகுப்பு போல சொன்ன பிறிதொன்று இல்லை. நவீன கவிதை மொழியின் குறுகிய வட்டங்களைத் தகர்த்து அதை வெகுசன மொழியாக மாற்றியதன் மூலம் மனுஷ்ய புத்திரனின் மொழி தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய தடத்தை உருவாக்கியிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் ரகசியக் கனவுகளின் மொழிபெயர்ப்பாளனாக மனுஷ்ய புத்திரன் திகழ்கிறார்.
மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவும் திகழ்கின்றன. இக்கவிதைகளில் பல சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மிகப்பெரிய அளவிற்கு ட்ரெண்டிங்காக மாறின. இளைய தலைமுறையினரின் வாட்ஸப் ஸ்டேஸ்களின் சுரங்கமாக இக்கவிதைகள் திகழ்கின்றன. தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலோ ஏன் உலக அளவிலோ ஒரு நவீன கவிஞர் ஓராண்டில் இவ்வளவு கவிதைகளை எழுதியதில்லை.
Additional information
| Weight | 2.3 g |
|---|---|
| Dimensions | 10.4 × 15 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 2288 |
| Format | Hard cover |
| ISBN | 9789393650436 |



Reviews
There are no reviews yet.