மோட்டார் சைக்கிள் டைரி
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
நான் இந்தக் குறிப்புகளை முதலில் படிக்கும் போது அது புத்தக வடிவத்தில் இருக்கவில்லை. அதை எழுதிய நபரை எனக்குத் தெரியாது. நான் சிறுமியாக இருந்தேன் இவ்வளவு தனிமையுடன் தன் சாகசங்களைக் குறித்து வைத்த நபருடன் நான் உடனேயே மனதளவில் நெருங்கிப் போனேன். நிச்சயமாக நான் வாசிப்பைத் தொடர்ந்த போது அந்த நபர் யாரென்பதை தெளிவாகக் காணத் தொடங்கினேன். அந்த மனிதரின் மகளாக இருப்பதில் அளவுக் கதிகமான சந்தோஷத்தையும் அடைந்தேன்.
எனது லட்சியம் இந்தப் புத்தகத்தில் நீங்கள் கண்டதில் எதைப் பற்றியாவது சொல்வது என்பதல்ல. ஆனால் எனக்குத் தெரியும் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு சில பத்திகளைப் படிப்பதற்காக திரும்பவும் வருவீர்கள். சிலவேளை அவை விவரிக் கிற விஷயங்களின் அழகால் அல்லது அவை தோற்று விக்கிற உணர்ச்சி தீவிரத்தாலும் அப்படி ஆகலாம்.
சில வேளைகளில் நான் பைக்கில் கிரானாடோவின் இடத்தில் அமர்ந்து, அப்பாவின் பின் புறத்தில் கையைக் கோர்த்து அழுத்திப் பிடித்தபடி அமர்ந்து பயணம் செய்திருக்கிறேன். நானும் அவருடன் மலைகளைத் தாண்டியும், தடாகங்களைச் சுற்றியும் பயணம் செய்தேன். அவரைத் தனியாக விட்டு விட்டு வந்த சில வேளை களும் உண்டென் பதை நான் ஒத்துக் கொள்கிறேன். குறிப்பாக நான் ஒருபோதும் என்னைப் பற்றிப் பேச விரும்பாத விஷயங்களை அவர் விளக்கமாகச் சொல்கிற பகுதிகளில். அப்படிச் செய்யும்போது எவ்வளவு தூரம் உண்மையானதும் பாரம்பரிய எதிர்ப்பளானுமாக அவர் இருந்தார் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.