மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்

Original price was: ₹399.00.Current price is: ₹360.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: PSV குமாரசாமி
டோக்கியோவில் ஜிம்போச்சோ என்ற பகுதியில் புத்தகப் பிரியர்களின் சொர்க்கலோகம் ஒன்று மறைந்திருக்கிறது.
அப்பகுதியிலுள்ள ஒரு பழங்கால மரக் கட்டடத்தின் ஓர் அமைதியான மூலையில், நூற்றுக்கணக்கான பழைய புத்தகங்களை உள்ளடக்கிய ஒரு பழம்பெரும் புத்தக விற்பனைக் கடையான ‘மோரிசாகி புத்தகக் கடை’ நிலை கொண்டுள்ளது.
அப்புத்தகக் கடை, இருபத்தைந்து வயது இளம்பெண்ணான டகாகோவின் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக இருந்து வந்துள்ளபோதிலும், புத்தக வாசிப்பில் அவளுக்கு ஒருபோதும் நாட்டம் இருந்ததில்லை. அவளுடைய தாய்மாமா சட்டோருதான் இப்போது அதைப் பெருமையுடனும்
மகிழ்ச்சியுடனும் நடத்திக் கொண்டிருக்கிறார். டகாகோவின் மானசீகக் காதலன் தான் வேறொரு பெண்ணை மணமுடிக்கவிருப்பதாக அவளிடம் வெளிப்படுத்தும்போது மனமுடைந்து போகின்ற அவளுக்கு, அவளுடைய மாமா சட்டோரு,
தன்னுடைய புத்தகக் கடையின் மேல் மாடியில் உள்ள அறையில் இலவசமாகத் தங்கிக் கொண்டு தன்னுடைய கடையைப் பார்த்துக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறார். டோக்கியோவைவிட்டுத் தன் கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பாத டகாகோ, தயக்கத்தோடு அதற்குச் சம்மதிக்கிறாள். ஆனால், மோரிசாகி புத்தகக் கடையில் குவிந்து கிடக்கும் புத்தகங்கள், சுக்குநூறாகிப் போயுள்ள தன் இதயத்தைக் குணப்படுத்துகின்ற அருமருந்தாக அமையும் என்று டகாகோ தன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
வாழ்க்கை, பாசம், புத்தகங்களின் குணமாக்கும் சக்தி ஆகியவற்றை, சட்டோரு, டகாகோ ஆகிய இருவருக்குமே மோரிசாகி புத்தகக் கடை கற்றுக் கொடுக்கிறது.

Additional information

Weight 0.25 g
Dimensions 1.7 × 13 × 20 cm
Author Name

Publisher

Pages

232

Format

paperback

ISBN

9789373716079

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மோரிசாகி புத்தகக் கடையில் நான் கழித்த நாள்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories