ராவணன் ராட்சசர்களின் அரசன்
Original price was: ₹450.00.₹427.00Current price is: ₹427.00.
Description
உண்மையான சுயத்தை அறியாமல் பிறந்து, தேவர்களின் கொடுமையால் என் அடையாளத்தை இழந்து, எனக்குள் அடங்காமல் இருக்கும் ஆன்மாவுடனும், தடுத்து நிறுத்த முடியாத மனக் கிளர்ச்சியுடன் போராடி சாம்பலில் இருந்து மீண்டெழுந்தவன் நான். லட்சியம், உறுதி மற்றும் அறிவின் துணையோடு மட்டுமே எனக்கான பாதையை உருவாக்கி என் எல்லைகளை விரிவுபடுத்தி என் சொந்த சாம்ராஜ்யத்தை நிறுவினேன்.
இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நீங்கள் என்னை எரித்துக் கொண்டாடுகிறீர்கள், ஆனாலும் நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். உங்களுக்குப் புரியாத ஒன்றை வெறுப்பது எளிது என்று சொல்வார்களே, அதுபோலதான், நீங்கள் என்னை ஒருபோதும் புரிந்துகொண்டதில்லை.
தோல்விகளால் சூழப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்திற்கு அரசனாகி, அது எப்படி தன் வெற்றியை மீண்டும் கைப்பற்ற வேண்டுமென கற்று தந்தேன். நான், மற்ற சில அரசர்களைப் போல அவர்களின் தந்தையின் வாரிசுகளாக வசதியான பாரம்பரிய வரலாற்றிலிருந்து கிரீடத்தை பரிசாகப் பெறவில்லை. உங்கள் இதயங்களில் ஒரு வெறுக்கத்தக்க கட்டுக்கதையாகவே வாழ்ந்திருக்கிறேன். ஆனால் எனக்குள்ளே சென்று என்னை நீங்கள் எப்போதாவது பார்க்க முயற்சி செய்ததுண்டா? நான் உண்மையில் யார் என்பதை அறிய ஒரு முயற்சியை நீங்கள் செய்ததுண்டா? உங்கள் அறியாமையால் ஒவ்வொரு ஆண்டும் என்னை எரிக்கும் உங்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.
என்னைப்பற்றி நீங்கள் பல செய்திகளை சொல்கிறீர்கள், ஆனால் இன்னும் பல கதைகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்….
மறைக்கப்பட்டதை உரைக்கிறேன். மன தைரியம் இருந்தால் கொஞ்சம் நான் சொல்வதைக் கேளுங்கள்…
என் கதையை நானே உங்களுக்குச் சொல்கிறேன்…
ராட்சசர்களின் அரசன் ராவணன்!
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 3 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 464 |
| Format | paperback |
| ISBN | 9789394266827 |



Reviews
There are no reviews yet.