ரிஷிமூலம்

Original price was: ₹165.00.Current price is: ₹156.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்த ரிஷிமூலம் என்கிற கதையை நான் மூன்று வாரம் தினமணி கதிரில் எழுதினேன். அதன்பிறகு தினமணி கதிரில் வாசகர் கடிதம் ஒன்றைப் பிரசுரித்து, ‘இனிமேல் இது போன்ற கதைகள் தினமணி கதிரில் பிரசுரிக்கப்பட மாட்டாது ‘ என்ற ஆசிரியர் குறிப்பும் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ரிஷிமூலம் கதையை ஆதரித்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் எனக்கும் கதிர் ஆசிரியருக்கும் வரலாயின. இப்போதுகூட இலக்கிய விமர்சனம் பயில்கிறவர்களாலும் வாசகர் வட்டாரங் களிலும் இந்த ரிஷிமூலம் சமயம் கிட்டுகிற போதெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. இது பற்றிய எத்தனைவிதமான அபிப்பிராயங்கள் உண்டோ அத்தனையையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

என் கதைகளைத் தாண்டி என்னைக் கணிக்க முற்படுகிற காரியத்தில் பலர் முனைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட விமர்சனத்தைச் செய்ய வருகின்ற அனைவருமே தாங்கள் யார் என்பதைத்தான் எனக்குக் காட்டிக் கொள்கிறார்கள். தங்கள் அரை வேக்காட்டுப் படிப்பாற்றலையும், தாங்கள் தழுவி இருக்கும் கொள்கைகளின் மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறி மயக்கத்தையும் தமுக்கடித்து ஊரறியச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறவர்கள் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு தமுக்கு இல்லாததனால் ஜெயகாந்தன் என்று முரசத்தை ஓங்கி முழக்குகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே.

ஆனால் இந்த முரட்டு விமர்சகர்களில் பலர்கொட்டிக் கொட்டி முழக்குவது தங்கள் குருட்டுத் தனத்தைத்தான்.
மேலும் இவர்கள் இன்றைக்குத் தழுவி இருக்கிற கொள்கை களைக் கடந்த காலத்தில் நானும் சார்ந்திருந்து இப்போது அவற்றைக் கை கழுவிவிட்டு வந்துவிட்டதாகக் கருதிக் கொண்ட கோபமும் பகைமையும் இவர்களது விமர்சனத்தின் ஆதார சுருதியாகவும் ஆரவார கோஷமாகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறது.
அதற்குமேல் எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கட்டிவிட வேண்டும் என்கிற இவர்களது ஆத்திரமும் தெரிகிறது.
‘சமுதாயம் உன்னைத் தூக்கி எறிந்துவிடும்’ என்று எச்சரிக்கை விடுகிற மிரட்டும் தோரணை (Black Mailing)யும் தெரிகிறது.

Rishi, Risi, Rishi, Moolam, Mulam, Moolamm, jeyakandhan, Meenakshi Puthaka Nilayam

Additional information

Weight 0.15 g
Dimensions 0.9 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

176

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ரிஷிமூலம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories