லெனின் வாழ்க்கை குறிப்புகள்
Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Description
தமிழில்: நம்பி
வாழ்க்கைக் குறிப்புகளில் எத்தனையோ வகையான வாழ்க்கைக் குறிப்புகள் உண்டு; அரசியல்வாதி, சீர்திருத்தவாதி, கலைஞன், கவிஞன், கல்விமான், எழுத்தாளன், ஆராய்ச்சிக்காரன், விஞ்ஞானி இத்தகையோரின் வாழ்க்கைக் குறிப்புகள் மேலைநாட்டு மொழிகளில் எல்லாம் ஏராளமாக நூல் வடிவில் வெளிவந்து இருக்கின்றன.
நமது அருமைத் தமிழ் மொழியில் வாழ்க்கைக் குறிப்பு இலக்கியங்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. டாக்டர் உ. வே. சுவாமிநாத அய்யர் அவர்கள், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்க்கைக் குறிப்புகளைச் சுயசரிதங்களாக எழுதியிருக்கிறார்கள். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், தியாகராஜ செட்டியார் அவர்கள் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகளை டாக்டர் அய்யர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
காந்தியடிகள் சுயசரிதமும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சுயசரிதமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
அரசியல்வாதிகள், சீர்திருத்தவாதிகள், கலாரசிகர்கள், விஞ் ஞானிகள், எழுத்தாளர்கள் ஆகியோரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் தமிழில் இன்னும் விரிவான முறையில் வெளிவரவில்லை; இனிமேல் தான் வெளிவர வேண்டும். இந்த நூலின் வரலாற்று நாயகன் விளாதிமிர் இலிச் உலியானோவ் என்ற லெனின் அவர்களின், உலக வரலாற்றிலேயே புதிய ஒரு சகாப்தத்தையும், வாழ்க்கை முறையையும் அரசியல், சமூக பொருளாதார அமைப்பு முறைகளையும் தோற்றுவித்த கர்மவீரர்; காலம், இடம் இரண்டையும் சரியாகவும் நேர்மையாகவும் நிலைகலங்காமலும் பயன்படுத்தி, ஏழை மக்கள் உய்யும் பொருட்டு, புரட்சிகரமான புதிய ஒரு சர்க்காரை நிர்மாணிக்க அரும்பாடுபட்டு அதில் வெற்றிகண்ட அண்ணல்; ஞாலம் கருதினும் கைகூடும்; காலம், கருதி இடத்தால் செயின் என்ற வள்ளுவரின் வாய்மொழியை மெய்ப்பித்துக் காட்டிய ஞானி.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 306 |
| Format | paperback |
| ISBN | 9789393780928 |



Reviews
There are no reviews yet.