வாத்ஸாயனரின் காமசூத்திரம்
Original price was: ₹280.00.₹266.00Current price is: ₹266.00.
Description
“நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கைமுறையை மாற்றி இருந்தாலும், இன்னமும்கூட பெரியோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களே அதிகம். ஜாதகப் பொருத்தம், ஜாதிப் பொருத்தம், வசதி எல்லாம் பார்த்து வரதட்சணையால் தீர்மானிக்கப்படும் இந்த வகைத் திருமணங்களில் தம்பதியாகப்போகும் இருவரின் மனப் பொருத்தத்தை மட்டும் யாரும் பார்ப்பதில்லை. மிகச்சிறந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருப்பார்; எல்லா புரோக்ராம்களையும் படிக்கத் தெரிந்த அவரால், ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் படிக்கத் தெரியாது. மனைவியின் மனதில் என்ன இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தெரியாது. தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தவும் தெரியாது. பெண்களுக்கும்கூட, எவ்வளவு படித்திருந்தாலும் இந்த விஷயத்தில் புரிதல் குறைவாகவே இருக்கிறது.
இருமனங்களின் புரிதலோடு குடும்பம் நடத்துவதைப்பற்றி எதுவுமே தெரியாத இருவர், இப்படி ஒரு திருமணத்தால் இணைந்து இல்லறம் நடத்தும்போது, அவர்களுக்குள் பரஸ்பரம் புரிதல் இல்லாமல் போகிறது; அருகருகே இருந்தும் இருவரின் மனங்களுக்கிடையே இடைவெளி பெரிதாகிறது. நாளடைவில் வாழ்க்கை சுவாரசியமற்றுப் போகிறது. மனதைப் படித்து இல்லறம் நடத்தும் அறிவை அந்தக் கால மக்கள் காமசூத்திரத்திலிருந்து பெற்றார்கள். அதனால்தான் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.”
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 1.2 × 17 × 24 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 448 |
| Format | paperback |
| ISBN | 9788184764703 |



Reviews
There are no reviews yet.