வாழ்வின் கீதம்
Original price was: ₹340.00.₹323.00Current price is: ₹323.00.
Description
தமிழில்: மா.தியான் ப்ரியா
இருளைக் கண்டு பயம் என்பது நாம் தனியாளாக விடப்படுவதனால் ஏற்படும் பயத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் தனிமையின் பயம், இருளின் பயத்தோடு சேர்ந்து வருகிறது. வெளிச்சத்தில் நீ முற்றிலுமாக தனிமையில் இல்லை, உன்னால் மற்றவர்களைப் பார்க்க முடியும் பதிலாக இருளில் எத்தனை பேர் அங்கே உட்கார்ந்திருந்தாலும் நீ தனிமையில்தான் இருக்கிறாய். மற்றவர்கள் தெரிவதில்லை மற்றவர்கள் அங்கே. இருக்கிறார்களா, இல்லையா என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியாது மனிதன் இருளில் தனிமையில் இருக்கிறான். யாராவது தனிமையில் இருக்க விரும்பினால் அவர்கள் இருளுக்குள் நுழைய வேண்டும்
யோகா,தியானம், சமாதி ஆகிய இவையாவும் இருளுக்குள் ஊடுருவும் தன்மையைக் குறிக்கும் பிற வார்த்தைகளே
இந்த விஷயங்களை ஒரு அறிமுகம் போல நான் ஏன் சொல்கிறேன் என்றால், இருளை உன்னால் நேசிக்க முடியா விட்டால், வாழ்வின் மிகப் பெரிய உண்மைகளை அறியாமல் நீ வழி மாறிப்போய்விடுவாய்.
அடுத்த முறை நீ இருளுக்குள் இருக்க நேரிட்டால், அதனுள் நேரிடையாகப் பார், அது உன்னை பயமுறுத்தவில்லை என்பதை நீ உணர்வாய் உன்னைச் சுற்றி இருள் இருந்தால், அதனுள் ஒன்றிவிடு, அதனுள் சென்றுவிடு, ஒளி உனக்கு ஒருபோதும் கொடுக்க முடியாத ஒன்றை இருள் உனக்கு கொடுப்பதை நீ காண்பாய்.
வாழ்வு அன்னையின் கருவறை இருளில்தான் பிறக்கிறது. நாம் இருளுக்குள்ளிருந்து பிறப்பு எனும் கதவு வழியாக வருகிறோம், இறப்பு எனும் கதவு வழியாக இருளில் மறைந்து போகிறோம்.
Kannadasan Pathippagam, Osho, Dhiyan Priya
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 420 |
| Format | paperback |
| ISBN | 9788184028409 |



Reviews
There are no reviews yet.