96

(1 customer review)

Original price was: ₹240.00.Current price is: ₹228.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்களிடம், நிறைய கதைகள் குறித்து விவாதிப்போம். ஆனால் அவற்றையெல்லாம் ஏன் திரைக்கதையாக எழுதுவதில்லை என்றால். அந்தக் கதையின்மீது ஆரம்பத்திலிருந்த சுவாரஸ்யம் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இல்லாமல் போனதே காரணம். கதை ஆரம்பித்து கால் மணிநேரம், அரை மணிநேரம் அல்லது 90 கதைகள் ஒடு மணிநேரத்திற்குப் பிறகு நகர்த்தமுடியாமல், ஏதோ ஒரு இடத்தில் சிக்கி நின்றுவிடுகின்றன. எனவே. இதுவும் மற்றகதைகள் போல சாதாரண கதைதான் என்று நாமே நினைத்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு திரைக்கதையின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது சினிமா என்ற வடிவத்திற்குள் பொருந்திப்போக வேண்டும். ஒரு நல்ல ஆரம்பம், இடைவேளைக்கு ஏற்ற உச்சகட்டக் காட்சி, அதற்கடுத்த இரண்டாம்பாதி கதை என திரைக்கதையின் முடிச்சுகளுக்கெல்லாம் தீனிபோடுவது போல ஒரு கதை அமைய வேண்டும். திரைப்பட வடிவத்திற்குள் அது உட்கார வேண்டும். பல கதைகள் அந்த வடிவத்திற்குள் பொருந்தாமல் நீர்த்துப்போய்விடுகின்றன. இது ஒரு பிரச்சனை. அடுத்தது, நீரோட்டம் போல தாங்குதடையில்லாமல் கதை நகர்வது. நீங்கள் எழுத உட்கார்ந்தால் ஆரம்பம் முதல் முடிவு வரை, அந்த கதையோட்டம் இருக்க வேண்டும். அந்த ஆளுமை இல்லாவிட்டால் நீங்கள் எழுதக்கூடாது.

96 திரைக்கதையைப் பொறுத்தவரை, கதை எங்கும் பாதியில் தொய்வடைந்து நிற்கவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக திரைக்கதை நுணுக்கங்களை மெருகேற்றிக்கொண்டே போனோம். இத்தனைக்கும் எனக்கு ஆரம்பத்திலேயே முழுக்கதையும் கற்பனையில் வந்துவிடவில்லை. ‘இரண்டு முன்னாள் பள்ளிப்பருவ காதலர்கள் சந்திக்கிறார்கள். அவர்கள் சந்தித்த அன்று இரவு நடக்கக்கூடிய ஒரு நாள் சம்பவங்கள் இதை எப்படி எழுதலாம்? என்றுதான் ஆரம்பித்தேன். ஒரு காட்சி முடிக்கும்போது, அடுத்த காட்சி என்னவென்று தெரியாது. ஆனால், முந்தைய காட்சி, அடுத்த காட்சியின் தொடர்ச்சிக்காக ஏதோவொன்றைக் கொடுக்கும். இப்படி ஒவ்வொரு காட்சியாக எழுதி முடிக்கும்போது முழுப்படத்திற்கான திரைக்கதையும் தயாராகிவிட்டது.

Ninety Six, 96, Ninety-Six, S. Prem Kumar, Pesamozhi Pathippagam, Pure Cinema Book Store

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

206

Format

paperback

Reviews (1)

5.00
1 reviews
5
1
4
0
3
0
2
0
1
0
Add a review “96”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Showing 1 - 1 of 1 review

  1. Helpful? 0 0

    Sudharsan

    Such a great movie its a heart warming story ✨😭

    [...]
My Cart
Wishlist
Recently Viewed
Categories