தாய்

Original price was: ₹500.00.Current price is: ₹450.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

‘தாய்’ நாவல் குறித்து லெனின்
லெனின் வேறுவிதமாக இருப்பார் என்று நினைத்தேன். அவரிடம் ஏதோ ஒன்று இல்லாதது போல் தோன்றிற்று. அவர் கரகரத்த குரலில் பேசினார்; தமது அக்குளில் எங்கேயோ கைகளை நுழைத்துக் கொண்டு இறுமாப்பான பார்வையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார், மொத்தத்தில் அவர் ஒரு வெகு சாதாரணமானவராகக் காட்சி அளித்தார். அவரிடம் தலைவரின் அடையாளம் எதுவுமே இல்லை. நான் ஓர் எழுத்தாளர். சிறு விஷயங்களைக் கவனிக்கும்படி என்னுடைய தொழில் என்னை வற்புறுத்துகிறது. இக்கடமை ஒரு பழக்கமாகிவிட்டது. சில சமயங்களில் இது சலிப்பூட்டும்.
நான் ஜி.வி.பிளெக்கனோவிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் தமது கைகளைக் குறுக்கு வாட்டத்தில் வைத்துக்கொண்டு ஒரு கடுமையான, ஆனால் சலிப்படைந்த பார்வையை என்மீது வீசினார். தமது கடமையைச் செய்து சோர்வுற்ற ஓர் ஆசிரியர் மற்றொரு புதிய மாணவனைக் காண்பது போன்று அவர் பார்த்தார். அவர் மிக மிகச் சர்வசாதாரணமான ஒன்றை என்னிடம் கூறினார்: “நான் உங்களுடைய திறமையைப் போற்றுபவன்” இது தவிர அவர் வேறு எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. காங்கிரஸ் நடந்தபோது அவரோ அல்லது நானோ ‘மனந்திறந்து’ பேச வேண்டும் என்று விரும்பவில்லை.
ஆனால், கரகரத்த குரலில் பேசும் இந்தத் தடித்த, துருதுருப்பான மனிதர், சாக்கரடீஸ் புருவம் போன்ற கொண்டும், மற்றொரு கையால் எனது கையை தமது புருவத்தைத் தமது ஒரு கையால் துடைத்துக் இழுத்துக்கொண்டும் தமது அதிசயமான ஜீவ ஒளி நிறைந்த கண்களில் நேசமிக்க பார்வை பளிச்சிட என்னை நோக்கி, ‘தாய்’ நூலின் குறைபாடுகள் பற்றிப் அதன் கையெழுத்துப் பிரதியை இரவல் வாங்கி அவர் பேசத் தொடங்கினார். ஐ.பி.லேடிஷ்னிகோவிடமிருந்து படித்திருந்தார். அந்நூலை அவசரத்தில் எழுதினேன் என்று நான் சொன்னேன், ஏன் அவசர அவசரமாக எழுதினேன் என்று நான் விளக்குவதற்கு முன்பு, லெனின் தலையை அசைத்துவிட்டு அவரே அதை விளக்கினார். நான் அதை அவசர அவசரமாக எழுதியது நல்லதாய் போயிற்று; ஏனெனில் இப்புத்தகம் தேவைப்பட்டது. பல தொழிலாளிகள் உணர்ச்சி வேகத்தில், தன்போக்கில் புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தனர்; ‘தாய்’ நாவலைப் படிப்பது அவர்களுக்குப் பயனுள்ளதாயிருந்தது.
‘மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்’ என்று அவர் கூறினார். இதுதான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. பின்னர் அவர், ‘தாய்’ நாவல் அந்நிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறதா ? எந்த அளவு ரஷ்ய, அமெரிக்கத் தணிக்கையாளர்கள் இப்புத்தகத்தைக் கெடுத்துவிட்டனர் என்று வேகமாகவும், காரியகரமான முறையிலும் கேட்டார். ‘ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று நான் அவரிடம் சொன்னதும், முதலில் அவர் முகத்தைச் சுளித்தார்; பின்னர் தமது தலையைப் பின்பக்கமாகச் சாய்த்துத் தமது கண்களை மூடிக்கொண்டு அதிசயமான வகையில் சிரிக்க ஆரம்பித்தார். அவருடைய சிரிப்பு தொழிலாளிகளின் கவனத்தை ஈர்த்தது.

thai, thaai, tamil, novel, maxim, marxim, marksim, gorky, gargi, garky, gargy, discovery

Additional information

Weight 0.6 g
Dimensions 2.6 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

544

Format

Paper back

ISBN

9789391994990

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தாய்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories