வாய்க்கால்

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தனித்துவமிக்க கரிசல்காட்டுப் பகுதியைக் களமாகக் கொண்டு பூமணியால் எழுதப்பட்டது ‘வாய்க்கால்” இந்நாவல் பள்ளிப்பிராயத்துக் காதல் கதையை, முயல்வேட்டை நிகழ்வுகளின் ஊடாகச் சொல்லப் படுகிறது. கரிசல்காட்டு கிராமத்து ஆசிரியத் தம்பதியரின் மகனான கோபாலுக்கும் விவசாயக் குடும்பத்து மகளான லட்சுமிக்கும் இடையே பள்ளி நாட்களில் அரும்பிய காதல் நிறைவேறாமல், பணமும் நகையும் வர்க்கத்தடுப்பு சுவராய் நின்று பிரிப்பதில் அம்மாவின் சாகசமும், காதலுற்றோர் இருவரும் படும்பாடும் கரிசல் கிராமத்து மொழியில் நெஞ்சை உருக்கும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் பூமணி. இதற்கு கரிசல் காட்டு சொலவடைகளும், பேச்சுமொழிகளும் வலுசேர்க்கின்றன.
நாவலில் முயல்வேட்டையை முன்னிறுத்தி வேட்டை உத்திகள், வேட்டைச் சமூகத்திற்குரிய பகிர்ந்துண்ணும் பண்பாடும், தனிநபர் ஆளுமைத்திறன் பொதுநலத்திற்கு பயன்படுவதையும் நாவல் உணர்த்துகிறது. வியாபாரச் சமூகத்தின் சீர்குலைவுச் செயல்களும் சுட்டப்படுகிறது. பால்ய காதலின் வலியினூடாக வரும் முயல்வேட்டை ஒருவகையில் குறியீடாகவும் அமைந்துள்ளது. இங்கே பூமணியின் எழுத்தாளுமையை உணரலாம். இறுதிப்பகுதியில் வேட்டை நாய்களுக்கு அஞ்சி நாயகன் ஓடுவது வாசகரின் மனதில் நாவலின் தொடர்ச்சியை சிந்திக்கத் தூண்டுகிறது. நாவல் இன்னொரு பகுதியாக வாசகர் மனதில் ஓடத் தொடங்குகிறது. வாழ்க்கை ஒரு கட்டத்தில் முடிந்துவிடுவதில்லை என்கிறபோது நாவல் மட்டும் முடிந்துவிடுமா என்ன? வாசிக்கவும் யோசிக்கவும் தக்கவகையில் அமைந்த சிறு நாவல் “வாய்க்கால்”. என்ற சொல் பின்தொடருதல் என்ற பொருளில் அமைந்துள்ளது
– ஜனநேசன்

Additional information

Weight 0.15 g
Dimensions 0.5 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

80

Format

paperback

ISBN

9788169328159

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வாய்க்கால்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories