இந்தியப் பண்பாட்டு வரலாறு
Original price was: ₹650.00.₹617.00Current price is: ₹617.00.
Description
இந்தியா பல மொழிகள் பேசும், வேறுபட்ட பல கலாச்சாரங்கள் கொண்ட, பல இன மக்கள் வாழும் நாடு.நம் இந்தியப் பண்பாடு பண்டைய சமுதாய நிலையினை பிரதிபலிக்கின்றது. அதுமட்டுமன்றி கடந்த காலத்தை மதிப்பிட்டு, நிகழ்காலத்தைப் புரிந்துகொண்டு, எதிர்காலத்தை எதிர்கொள்ளத் துணை நிற்கிறது. நம் இந்திய நாகரிகத்தின் பண்பாட்டு கூறுகள் தனித்தன்மை வாய்ந்தவை! நம் இந்தியப் பண்பாடு பல நாகரிகங்களை கடந்து வளர்ச்சியை நோக்கி இன்றும் முன்னேற்றம் அடைந்த வண்ணம் உள்ளது.
நீண்ட நெடிய பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்க, பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்ட நம் இந்தியப் பண்பாட்டின் உயிர் மூச்சாக விளங்குகின்ற நம் மக்கள், அவர்கள் வாழும் முறை, சமூகம், சமயம், கலைகள், பொருளாதாரம், அரசியல், அரசாங்கம், கல்வி, இலக்கியம், மொழிகள் ஆகியவை பற்றி இந்தியப் பண்பாட்டு வரலாறு விரிவாக விளக்குகிறது. இந்நூலில் சிந்துவெளி நாகரிகம் முதல் இன்றைய இந்தியப் பண்பாடு வரையிலான பண்பாட்டு வளர்ச்சியை நூலாசிரியர் டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
இந்நூலில் நகர நாகரிகங்களின் வளர்ச்சி, வேதகால சமயநிலை, புத்த-சமணகாலக் கல்விநிலை, புலம் பெயர்ந்து வந்த பண்பாடுகளின் கலாச்சார வளர்ச்சி, இந்தியப் பன்முகப் பண்பாடுகளின் பங்களிப்புகள், தென்னிந்தியப் பண்பாட்டின் கலை வளர்ச்சி, அண்டை நாடுகளில் இந்தியப் பண்பாட்டின் பரவல், இஸ்லாமியப் பண்பாட்டின் எழுச்சி, இந்தியப் பண்பாட்டு மறுமலர்ச்சியின் தாக்கம், இன்றைய இந்தியப் பண்பாட்டின் பரிமாணங்கள் பற்றிய விரிவானதொரு விளக்கத்தைத் தந்துள்ளார் நூலாசிரியர் டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள்.
Additional information
| Weight | 0.8 g |
|---|---|
| Dimensions | 3.4 × 14.2 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 800 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.