சுதந்திர இந்திய வரலாறு

Original price was: ₹675.00.Current price is: ₹570.00.

Only 1 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நம் இந்திய நாடு பழம்பெரும் நாடு! நம் நாட்டின் தொன்மைச் சிறப்பு பெருமைக்குரியது. உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழும் நம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் போற்றத்தக்கது. இயற்கை வளம், மனித வளம், பொருளாதார வளம் பெற்றுச் சிறந்திருக்கும் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகான வரலாற்றினை சுதந்திர இந்திய வரலாறு எனும் இந்நூலின் மூலம் கற்றுணரலாம். இந்நூலினைப் படிக்கும் அனைவரும் வரலாற்றுப் பாதையில் பயணிக்கும் அனுபவத்தையும் பெறலாம்.
வரலாறு என்பது கடந்துவிட்ட காலத்தின் மறுபதிப்பே! சுதந்திர இந்தியாவின் வரலாறு முழுவதும் நடுநிலையுடன் எவ்வித சார்புமின்றி கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் 14 பகுதிகளில் இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பின்பற்றப்பட்ட குறிக்கோள்கள் கொள்கைகள், திட்டங்கள், நாடாளுமன்ற ஜனநாயக முறை. மக்களின் அடிப்படை உரிமைகள், மதச் சார்பின்மை, தற்சார்புப் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை போன்ற விடுதலைப் போராட்டக் காலத்தில் விதைக்கப்பட்ட விதைகளின் விளைச்சலையும் இந்நூலில் காணலாம்.
சுதந்திர இந்திய வரலாறு எனும் இந்நூலில் ஆட்சியாளர்கள் பற்றிய அவசியமான ஒரு கண்ணோட்டம் வரலாற்றுக்கு வலிமை சேர்க்கும் என்றால் மிகையாகாது. இந்திய அரசாங்கம் ஆரோக்கிய மான தக்க அரசியல் தலைமையின் கீழ் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி நடத்தி வந்ததை தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் எளிமை யாகவும் விரிவாகவும் காலவரன்முறைப்படி நூலாசிரியர் வரைந் திருப்பது வரலாற்றைப் புரிந்து தெரிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு இன்றியமை யாதது.
நூலாசிரியர் டாக்டர் க. வெங்கடேசன் அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை காலப்பாகுபாடு செய்து ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி செய்த பிரதமர்களை வரிசைப்படுத்தி இருக்கிறார். முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவில் தொடங்கி இன்றைய பிரதமர் நரேந்திர மோடி வரையிலான 69 ஆண்டுக்கால வரலாற்றினை, அவர்களின் சாதனைகளை, வெற்றி தோல்விகளை, முக்கிய நிகழ்வு களை, வெளியுறவுக் கொள்கைகளை வரலாற்றுப் பின்னணி யுடன் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் படைத்திருக்கும் பாங்கு பாராட்டுதலுக்குரியது.

Additional information

Weight 0.9 g
Dimensions 3.8 × 14.2 × 21.4 cm
Author Name

Publisher

Pages

772

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சுதந்திர இந்திய வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories