இந்தியாவில் சாதிகள்
Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
Description
நீங்கள் யாவரும் பாம்ப்பியின் (Pompi) சிதைவுகள் போன்ற சில வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்திருப்பீர்கள். இவற்றின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றையும் விளக்கியுரைப்பதற்கென்று பணியாற்றும் வழிகாட்டிகளின் வருணனைகளை வியந்து கேட்டிருப்பீர்கள். என் கருத்துப்படி மானுடவியல் மாணவர்களும் ஒருவகையில் இந்த வழி காட்டிகளைப் போன்றவர்களே என்பேன். அவர்களைப் போன்றே சமூக நிறுவனங்களை விளக்கியுரைப்பதற்குத் தம்மால் முடிந்த அளவு தம் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து அதேவேளையில் மிகுந்த ஆர்வத்தோடும் பொறுப்போடும் அவற்றின் தோற்றத்தையும் செயற்பாடுகளையும் இவர்கள் ஆய்வு செய்கின்றனர்
தொன்மைக்காலச் சமுதாயத்தையும் தற்காலச் சமுதாயத்தையும் ஒப்பிட்டு நோக்குவதில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களான இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள நம் மாணவ நண்பர்களில் பெரும்பாலோர் தம்மைக் கவர்ந்துள்ள தற்கால மற்றும் பண்டைய கால நிறுவனங்களைத் தெரிந்து திறம்பட எடுத்துரைக்க வல்லவர்களாவர். இந்த மாலைப் பொழுதில் நானும் என்னால் இயன்றவரை உங்களை மகிழ்விப்பதற்கு ‘இந்தியாவில் சாதிகள். அவற்றின் அமைப்பியக்கம் பிறப்பும் வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் என் கட்டுரையை படைக்க விரும்புகின்றேன்.
நூலிலிருந்து…
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9789349539013 |



Reviews
There are no reviews yet.