இமயவேந்தன் கரிகாலன்
Original price was: ₹800.00.₹740.00Current price is: ₹740.00.
Description
சோழவேந்தன் கரிகால் பெருவளத்தான் இமயத்தை இடியச் செய்த முதல் தென்னவன் கடலென ஆர்ப்பரிக்கும் காவிரியை அடக்கிய ஒரே சோழன். சிற்றரசாய் இருந்த சோழத்தின் விடியலாய் திருவிறங்கி தென்னகத்தின் முப்பெரும் பேரரசுகளில் ஒன்றாக சோழத்தை மாற்றியவன். அறத்தையும், கொடையையும் இரு கண்களாய கொண்டு வீரத்தின் உறைகல்லாய் விளங்கிய பேரரசன்.
கரிகாலனின் இளமைப் பருவத்தை வரலாற்றின் தீராத பக்கங்களில் மையினால் எழுதாமல் குருதியால் எழுதியது காலம் காலத்தின் இலக்கணத்தை மாற்றி, விதியின் விதி எழுதி சோழத்தை ஒப்பற்ற பேரரசாக உருமாற்றிய சோழ வேங்கையின் தீரம் உலகில் தடம் பதித்த அத்தனை பேரரசர்களையும் விஞ்சக் கூடியது.
உலகிற்கு படியளந்த உழவு நாட்டில் உதித்து, வடக்கை வாகை சூடி, திசைகளை வேரறுத்து. அறத்தை மொழி பெயர்த்து, கொடைக்கு பொருள் அளித்த பெரும் வீரனின் வாழ்வையும், ஆட்சி முறையையும் தமிழ் கொண்டு வடிப்பதில் பேருவகை கொள்கிறேன். கரிகாலனின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு தமிழரும் அறிந்து பெருமை கொள்ள வேண்டிய ஒன்று.
Additional information
| Weight | 1 g |
|---|---|
| Dimensions | 4.6 × 14.6 × 22.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 736 |
| Format | Hard cover |
| ISBN | 9788184466737 |






Reviews
There are no reviews yet.