இலியட் (காவியச் சுருக்கம்)
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Description
தமிழில்: அனந்தசாய்ராம் ரங்கராஜன்
மேலைநாட்டுச் செவ்விலக்கியங்களில் மிக முக்கியமான ஹோமரின் ‘இலியட்’ காவியத்தைச் சுருக்கமாக வாசித்து ரசிக்கும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
அழகி ஹெலனால் கிரேக்கத்திற்கும் டிராய் நகருக்கும் இடையே உருவாகும் வரலாற்றுப் புகழ்பெற்ற யுத்தத்தை மையமாகக் கொண்டதே இலியட். நண்பனை இழந்த வலியில் கிரேக்கப் படையின் மாவீரன் அக்கிலீஸ் கொள்ளும் ஆவேசம், டிராய் நாட்டின் தளபதி ஹெக்டரின் தியாகம், கிரேக்கர்களின் தந்திரமான ‘மரக்குதிரை’ (Trojan Horse) போரில் மாண்ட மகனின் உடலை யாசிக்கும் தந்தை பிரியமின் உருக்கமான வேண்டுகோள் எனப் பத்தாண்டுக் காலப் போரின் உக்கிரத்தையும்,போர்க்களத்தின் நிகழ்வுகளையும், அதனூடான மானுட உணர்வுகளையும் விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நூல்
மூலப் பிரதியின் வீரியமும், கதாபாத்திரங்களின் தவிப்பும் சற்றும் குறையாமல் சுருக்கித் தந்துள்ளார் ஆசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன். யுகங்கள் கடந்தும் அழியாத ஒரு வரலாற்றுப் பேரிலக்கியத்தை மிகக் குறுகிய காலத்தில் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.



Reviews
There are no reviews yet.