ஔவையின் கள் குடுவை

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஆதிலாவைத் தொடர்ந்து வரும் எனது இரண்டாவது கவிதை நூலுடன் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். புதிய கற்பிதங்களுடனும் அனுபவங்களுடனும் காலம் அதன் அச்சில் நகர்கின்றது. மனதோடு ஊடாடிக் கிடக்கும் கவிதை மனதின் நீட்சி, விசாலமானதாக மாறியிருப்பதை இப்போது நான் உணர்கிறேன். நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
சிலநேரங்களில் கவிதை ஒரு தெறிப்பாகவோ, ஒரு பூவைப் போலவோ பூத்து விடுகிறது. அதுபோன்ற தருணங்களில் எனது மனமண்டலத்தில் நான் கொஞ்சம் வார்த்தைகளோடு உலாவுகின்றேன். சில நேரங்களில் வார்த்தைகளும் என்னை எடுத்தாட்கொண்டு உலாவுகின்றன. எல்லையென்றோ பரப்பென்றோ ஏதுமற்ற காற்றைப்போல, இம்முறை சில கவிதைகளைப் பெருவெளியில் விட்டெறிந்திருக்கிறேன். அதில் சிலவேனும் என் மன அம்சங்களின் சாரத்தை வாசகப்பரப்பில் இட்டுச் செல்லவோ, நட்டுச்செல்லவோ கூடும். தொடர்ந்த உரையாடலும், வாசிப்பும் என்னைப் பிரதேசம், மொழி என எல்கை கடந்து இன்னுமொரு பேருலகைச் சுவீகரிக்க வைத்திருக்கிறது. அந்தச் சுவீகாரம் குருதியோட்டத்தைப் போல என் கவிதைகளில் வெளிப்படுகிறது.
கவிதை மனதின் இரகசியங்களும் பரகசியங்களும் கூடிக் கலையும் சில புள்ளிகளில், குவிந்த வார்த்தைகள் ஒன்றின் மீது ஒன்றாக மையல்கொண்டு பின்னிக் கிடக்கின்றன. எனவேதான், எனதிந்தக் கவிதைகளில் பூனை ஒரு நத்தையைப் போல ஊர்கின்றது. யானை ஒரு காட்டுச் செடியைப் போல மணக்கின்றது. இதன் வழி உண்டாகும் புதிய சித்திரங்கள் ஒளவையின் கையில் ஒரு பெருஞ்சித்திரமாக மலர்வதையும் அவதானிக்க முடியும்.
நம்பிக்கைதான் எல்லாமுமாக இருக்கிறது. நம்பிக்கை ஒளியானது. அது வெளிகளில் பல சித்திரங்களைத் தோற்றுவிக்கிறது. சில வகைமைகளில் ஒன்றுபோல் தோன்றுதல் தரக்கூடியது. இத்தொகுப்பின் ஆழத்தில் அவ்வாறு பல சித்திரங்களின் வகைமைத் தன்மையைக் காண இயலும். அது வாசிப்பில் நமக்குப் பொதுவானதாக மலரும்.
– அன்புடன் அம்முராகவ்

avvaiyin, ouvvaiyin, awwaiyin, kal, kuduvai, kall, guduvai, amu, ammu, ammmu, ragav, raagav, raghav, raaghav

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 13.5 × 21.6 cm
Author Name

Publisher

Pages

128

Format

paperback

ISBN

9789391367589

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஔவையின் கள் குடுவை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories