கம்யூனிசம் என்றால் என்ன?
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
தோழர் ஏவின் மனோ அவர்களின் ‘கம்யூனிசம் என்றால் என்ன? என்ற நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது முதலில் முகநூலில் தொடராக வந்து பின்னர் தேசத்தின் குரல் என்ற அரசியல் பத்திரிக்கையில் தொடராக வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தோழர் ஏவின் மனோ அவர்கள் இந்த தொடரை பேச்சு வழக்கு தமிழில் கொடுத்து இருப்பது வாசகர்களுடன் உரையாடுவது போன்றும், அருகில் அமர்ந்து விவாதிப்பது போன்றும் உள்ளது.
கடுமையான சொற்பதங்கள் கொண்டிருக்கும் மார்க்சிய நூல்களை வாசிக்க கடினப்படும் இன்றைய இளையோர்களுக்கும். மாணவர்களுக்கும் இந்த நூல் கம்யூனிசத்தை அறிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமில்லை. இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தகுந்தாற் போலும், பொருள் விளக்கங்களில் விலகி சென்று விடாமலும் எளிமையான முறையில் வாசகர்களுடன் உரையாடும் ஏவின் மனோ போன்ற ஆற்றல்மிக்க இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதை ஆய்தம் பதிப்பகம் கடமையாக கருதுகிறது. இந்நூலுக்கு அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த ஜோயலுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த முதுவை கேசவனுக்கும் எமது நன்றிகள்.



Reviews
There are no reviews yet.