கவுண்ட் லியோ டால்ஸ்டாய் கதைகள்
Original price was: ₹1,500.00.₹1,350.00Current price is: ₹1,350.00.
Description
தொகுப்பாசிரியர்: சிதம்பரம் கே.செல்வம்
இலக்கியத்திற்கு ‘புத்துயிர்ப்பு’ அளித்தவர் மகான் லியோ டால்ஸ்டாய். மகாத்மாகாந்திக்கு ஆதர்சமாக இருந்தவர். காலக்கண்ணாடி என்று வர்ணிக்கப்பட்டவர். எழுத்துலக ரிஷி. வசதி படைத்த பின்னணியில் பிறந்திருந்தாலும் எளிய மனிதர்களையே எப்போதும் நேசித்தவர். அவர் எழுதிய ‘போரும் வாழ்வும்’, ‘அன்னாகரீனா’ போன்ற நாவல்களுக்கு உள்ள புகழ் அவரின் ‘ஆறடி நிலம்’, ‘நடனத்திற்குப் பிறகு’ போன்ற சிறுகதைகளுக்கும் உண்டு. இந்தியாவில் சீதைக்கும், பாஞ்சாலிக்கும் உள்ள பிரபலம் உலக இலக்கிய வீதியில் எப்போதும் ‘அன்னாகரீனா’வுக்கும் உண்டு.
1950-களில் டால்ஸ்டாயின் கதைகளை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய சக்தி காரியாலயம் வை. கோவிந்தன் அன்றைய இலக்கியவாதிகளால் வைகோ என்று அழைக்கப்பட்டவர். பதிப்புத்துறையில் பல பாய்ச்சலை நடத்திய சாதனையாளர். வை. கோவிந்தனும் இந்தக் கதைகளை மொழிபெயர்த்த கு.ப.ரா, ரா. விசுவநாதன், சுப. நாராயணன்,ஆர்வி, வி.எஸ். வெங்கடேசன் முக்கியமானவர்கள். டால்ஸ்டாயின் வாழ்க்கைச் சரிதத்தின் சுருக்கத்தை எழுதிய ஆக்கூர் அனந்தாச்சாரியார் மொழிபெயர்த்த சில கதைகளும் இந்தத் தொகுப்பில் அடங்கும். இவர்கள் என்றென்றும் தமிழர்களின் நன்றியறிதலுக்குரியவர்கள். தமிழின் உயிர்மெய் எழுத்துக்களோடு தன் உயிரையும், மெய்யையும் ஒப்படைத்து தானும் ஓர் எழுத்தாகிப் போன வை.கோவிந்தனின் நினைவுகளுக்கு இந்தத் தொகுதியை இந்தத் தலைமுறையின் சார்பாக கம்பீரமாக சமர்ப்பணம் செய்கிறது வ.உ.சி.நூலகம். வை. கோவிந்தன் வளர்த்தெடுத்த கனவுகள் வளரட்டும். சொல் புதிது, சுவை புதிதாய் புதிய எழுத்துக்கள் பெருகட்டும்.
இமயத்துக்கு அப்பால் என்ற நூலின் மூலம் தன் வாசகர்களுக்கு டால்ஸ்டாயை அறிமுகப்படுத்திய என் நண்பர் திரு. ஜெயகாந்தன் அவர்களை இந்தக் கதைகளையெல்லாம் மறுபடியும் இந்தத் தொகுப்பிற்காக படிக்கும் போது நினைத்துக் கொள்கிறேன்.
Additional information
| Weight | 1.45 g |
|---|---|
| Dimensions | 7.2 × 15 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 1072 |
| Format | Hard cover |



Reviews
There are no reviews yet.