காதல்

Original price was: ₹450.00.Current price is: ₹405.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: சொ.பிரபாகரன்

‘காதல்’ அகிலமெங்கும் பரவிக்கிடக்கும் வார்த்தை. நமது வாழ்நாட்களில் அதிகம் விவாதிக்கும் கருத்தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் காதலுக்கு அர்த்தம் என்பது இன்றைய திரைப்படங்கள் சுற்றுக் கொடுப்பதாகத் தான் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் சமத்துவமற்று இருக்கும் இந்த சமூகத்தின் அரைகுறை கருத்தக்கங்கள் தான் கற்றுக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த சமூக கற்றுக் கொடுப்புகள் மீதான கேள்விகளும், விமர்சனங்களும், பதிலீடுகளும் தான் அலெக்சாண்டிரா கொலோண்டாய்யின் “காதல்”
அலெக்ஸ்சாண்டிரா கொலோண்டை உலகின் மிகப்பெரிய சோசலிச அரசாக இருந்த சோவியத்தின் மிக முக்கிய ஆளுமை (1872-1952). புரட்சிகர சமூகத்தின் ஆற்றல் மிக்க சிந்தனைவாதி. தைரியமிக்க, மிக சன்னமாக கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெண்மணி.

சோவியத்தின் சமூகநலத்துறை அமைச்சாராக இருந்தவர். அது மட்டும் அல்ல அந்த அமைச்சரவையில் இருந்த ஒரே பெண்மணி அலெக்சாண்டிரா கொலோண்டை மட்டும்தான். உலகத்திலேயே ஒரு பெரும் குடியரசின் அமைச்சரான முதல் பெண்மணி அவர்தான்.

அவரது முயற்சியால் இரண்டு உலகளவிலான கம்யூனிஸ்ட் பெண்கள் கருத்தரங்கள் நடத்தப்பட்டன. சுதந்திரமாய் கருச்சிதைவு செய்து கொள்ளும் சட்டம் தாராளமாக்கப்பட்டது. திருமணசட்டம் மூலம் திருமணங்கள் அரசின் மூலம் பதிவு செய்யப்பட்டது. தேவாலயத்தின் கை திருமண விவகாரங்களில் இருந்து எடுக்கப்பட்டது. கொலோண்டை எப்போதும் பெண்கள் பற்றியும், வர்க்கப் போராட்டத்தில் பெண்களின் பணிபற்றியும், சமூக வேலைகளில் பெண்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அதிகமாக பேசியும் எழுதியும் வந்தார். அவரது பணி லெனிடம் முழு ஆதவைப் பெற்றிருந்தது.

“காதல்” ஒரு தனிப்பட்ட புனைவு அல்ல. கொலோண்டை பல்வேறு காலகட்டங்களில் எழுதிய பல புனைவுகளின் தொகுப்பு. இந்த புனைவுகள் பெரும்பாலும் சோவியத் புரட்சியில் முன்னைய சில ஆண்டுகளிலும், அதன் பிந்தைய ஆண்டுகளிலும் நடக்கும் சம்பவங்களை கருவாகக் கொண்டது.

kadhal, kathal, katal, kadal, love, love, romance, Alexandra Kollontai, s. prabakaran, chinthan books

Additional information

Weight 0.6 g
Dimensions 2.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

500

Format

paperback

ISBN

9788194174400

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காதல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories