காற்றின் நாணல்கள்
Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
Description
பல சிறுகதைகள், நாவல்கள் படிக்கும் பழக்கம் இருக்கும் எனக்கு முதன்முறை படிக்க அமைந்த ஹைக்கூ கவிதை தொகுப்பு, விஜய் ஸ்ரீராம் எழுதிய ‘காற்றின் நாணல்கள்”.
‘ஹைக்கூ’ என்பது சொற்களை குறைப்பதல்ல, கவனத்தைக் கூர்மைப்படுத்துவது. சொற்களின் சுருக்கத்தில் உணர்வுகளின் செறிவை ஒளித்து வைத்திருப்பது. கண்களுக்கு முன் ஒளிந்து கிடக்கும் சிறு அதிசயங்களை சுட்டிக்காட்டி, இதை பாருங்கள் இங்கு நம்முடைய உயிர் மூச்சு ஒலிக்கிறது என்று நம்மை சிந்திக்க வைப்பது. மேலும் இந்த ஹைக்கூ தொகுப்பு பதிலை எதிர்பாராமல் நம்மிடமே கேள்விகளை விதைக்கிறது.
இந்த புத்தகத்தை விரைவில் முடித்துவிட வேண்டுமென்கிற அவசரமின்றி ஒரு கவிதை ஒரு நிமிடம் ஒரு மூச்சு என்ற தாள்களின் மெல்லிய இசையில் பக்கங்களை புரட்டுங்கள்.
இந்த அருமையான ஹைக்கூ மூலம் எழுத்து உலகிற்கு அறிமுகம் ஆகும் விஜய் ஸ்ரீராம் அவர்களின் படைப்பான ‘காற்றின் நாணல்கள்’ எனும் கவிதை தொகுப்பு, ஈர நிலங்களில் வளரும் நாணல் போல நீரின் மீது தோன்றி வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
– மரு.சே.நிவேதிதா
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 13 × 19 cm |
| Author Name | |
| Designed By | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN | 9789349765474 |



Ajay Kumar –
அற்புதமான வரிகள்…!!!
[...]அருமையான ஹைக்கூ கவிதைகள்.. வாழ்த்துக்கள்..
மாசேதுங். அ –
காற்றின் நாண்ணல் கவிதை மிகவும் அருமையானா வரிகள்
[...]