சரிக்குச் சரி

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இங்கிலாந்திலும், பிற நாடுகளிலும் ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் பற்றி மலையளவு நூல்கள் எழுதித் தள்ளிவிட்டனர். தர வரிசையில் அவருடைய இன்பியல் நாடகங்கள் கொஞ்சம் பின்னால்தான் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது.
மொழிபெயர்ப்பு என்று வரும்போது ஷேக்ஸ்பியரின் அவல நாடகங்கள் மற்றும் சரித்திர நாடகங்களைக் காட்டிலும் அவரது இன்பியல் நாடகங்களே உலகின் பல மொழிகளிலும் பெருமளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஷேக்ஸ்பியர் 17 இன்பியல் நாடகங்களை படைத்துள்ளார். இந்த மிக நீண்ட வரிசையை பொதுவாக நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளனர். பொதுவான வாசகர்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது அவரது இன்பியல் நாடகங்களை ஆரம்ப கால இன்பியல் நாடகங்கள், புத்தார்வ இன்பியல் நாடகங்கள், அவல இன்பியல் நாடகங்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம்.
‘சரிக்குச் சரி’ (Measure for Measure) அவல இன்பியல் வகையைச் சேர்ந்தது. இருண்ட இன்பியல் நாடகம் அல்லது சிக்கல் நாடகம் என்றும் கூறலாம்.
‘சரிக்குச் சரி’ என்ற தலைப்பு ‘கண்ணுக்கு கண்’, ‘பல்லுக்கு பல்’ போன்ற தண்டனை முறைகளை போன்ற தலைப்பே. ஆனால் நாடகத்தில் யாரும் அப்படி தண்டிக்கப்படவில்லை.
விடை காண முடியாத கேள்விகள் பலவற்றை ‘சரிக்குச் சரி’ நாடகம் எழுப்புகிறது. இந்த நாடகத்தைப் பொறுத்தவரை வாசகர்களிடம் எழும் சிக்கலான கேள்விகளுக்கெல்லாம் உறுதியான பதிலையோ அல்லது தீர்வையோ ஷேக்ஸ்பியர் கூறவில்லை.
‘சரிக்குச் சரி’ நாடகம் ஒரு கிறித்தவ நீதிக்கதை (Christian parable) போன்றது. தனிமனித ஒழுக்கம், ஓர் ஆட்சியாளனின் புனித கடமை, சமுதாய நெறிமுறைகள் போன்ற ஆழமான பொருள்களைப் பற்றி இந்நாடகம் சிந்திக்க வைக்கிறது.
பாலியல் உணர்வுகள் இயற்கைக்கு விரோதமானவை அல்ல. அவை பாவகரமானவையும் அல்ல. ஆனால் அந்த உணர்வுகள் செயல் வடிவம் பெறுவதில் ஒரு நெறிமுறையும், கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என்ற வகையில்தான் ‘சரிக்குச் சரி’ கதை அமைந்துள்ளது.
ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களில் ‘திருமணம்’தான் மிக இறுதியான காட்சி. ஆனால் ‘சரிக்குச் சரி’ நாடகத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஆஞ்சலோவுக்கு ஒரு தண்டனை போலவே வழங்கப்படுகிறது. நாயகி இசபெல்லாவிற்கு கூட அது ஒரு தண்டனைதான் என்று கருதவும் இடமுண்டு.

sari, sarri, sarik sarikk, sarrikku, will, willi, william, sha,shak, shake, spe, speare, sak, sake,

Additional information

Weight 0.3 g
Dimensions 1 × 14 × 21.2 cm
Author Name

Publisher

Pages

216

Format

paperback

ISBN

9788194017806

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சரிக்குச் சரி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories