வெனிஸ் நகரத்து வர்த்தகன்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலம் இங்கிலாந்தில் யூதர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட காலம். நாடகம் மற்றும் பிற கலைப் படைப்புகளில் கூட யூத கதாபாத்திரங்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் போக்கு இருந்தது. உலகப் பிரசித்தி பெற்ற ஷைலக் கதாபாத்திரம் கூட சிவந்த தலை முடியுடனும், கழுகு போன்ற விகாரமான மூக்குடனும் ஒப்பனை செய்தே காட்டப்பட்டது. என்னதான் ஷேக்ஸ்பியர் ஒரு கவிஞர் என்றாலும், உண்மை கிறித்தவர் என்ற முறையில் அவருக்கும் கூட அடிமனதில் யூதர்கள் மேல் லேசான வெறுப்பு இருந்ததாகக் கருத இடமுண்டு.
படைப்பாளியின் கிறித்தவ சார்பு நிலை வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனென்றால், ஷைலக் இறுதியில் சட்டத்தின் பிடியில் வசமாக சிக்கிக் கொள்ளும்போது பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் அவன் கிறித்தவனாக மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்படுகிறது. அவனும் அதை ஏற்றுக் கொள்வது போலத்தான் கதை முடிக்கப்படுகிறது. உலகில் இன்று சிறுபான்மை இனத்தவராக வாழ்ந்து வரும் யூத சமுதாயத்தினர் இந்தக் கதையை விரும்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் இலக்கியம் என்பது காலத்தைக். காட்டும் கண்ணாடி என்ற வகையில் இதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்…
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9788195065394 |



Reviews
There are no reviews yet.