நீ விரும்பிய விதமே
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
அரண்மனைவாசிகள் பலர் ராஜ்ஜியத்தை விட்டு விட்டு கானகம் சென்று விடுகின்றனர். சலசலக்கும் நீரோடைகளும், பச்சைப் பசேலென்ற புல்வெளியும். ஓங்கி வளர்ந்த மரங்களும், கொட்டும் அருவிகளும், துள்ளி ஓடும் புள்ளிமான்களுமாக கானக வாழ்வு தேனாக இனிக்கிறது.
‘முல்லை நில நாடகம்’ என்று கூறப்படும் ‘நீ விரும்பிய விதமே’ நாடகத்தின் கானக வாழ்வு அனைவரையும் கவர்வதாக உள்ளது. என்றாலும் இப்படி ஒரு வாழ்க்கை ஒரு சில நாட்களுக்குத்தான் இனிமையாக இருக்கும் என்றும், பிறகு அந்த இனிமை திகட்டுவதைப் போலாகிவிடும் என்றும் சில திறனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தேனும், தினை மாவும், காய்களும். கனிகளும் எத்தனை நாட்களுக்குத்தான் சுவை தரும்?
நகர வாழ்க்கையின் இறுக்கத்தில் இருந்து விடுமுறைச் சுற்றுலா போன்று ஒரு கானகப் பகுதிக்கு செல்வதே மனதுக்கு மகிழ்வு தரும் என்றும் பின்னர் போராட்டமான நகர வாழ்வுக்குத் திரும்பி விடுவதே முறை என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கதையிலும் அதுதான் நடக்கிறது…
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 192 |
| Format | paperback |
| ISBN | 9788195065325 |



Reviews
There are no reviews yet.