சிக்மெண்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள் – ஓர் எளிய அறிமுகம்

Original price was: ₹80.00.Current price is: ₹76.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மனிதர்களின் வாழ்க்கை போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக காட்சியளிக்கிறது. பேருந்தில் இடம் பிடிப்பது முதல் பாராளுமன்றத்தில் இடம் பிடிப்பது வரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் இம்மனப்பான்மையோடே மனிதன் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். தொழில்களில், நிறுவனங்களில், கலைத்துறையில், கல்வித்துறையில், அரசியலில், மதங்களில் சாதிகளில் போட்டி போட்டுக்கொண்டு இயங்கும் மனிதனின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் உளக் கூறுகள் ஒருபோதும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க அவனை விடுவதில்லை. ஒருவன் எவ்வகையான கலாச்சாரப் பண்பாட்டை பின்பற்றுகிறான், அவனின் வம்சம் எது, அவன் எங்கிருந்து வந்தான், அவனது பெற்றோர் யார். மூதாதையர் யார். அவன் மதம் என்ன, சாதி என்ன என்பதை ஆர்வத்தோடு அவதானித்து அதன்வழியே அவனுக்கான அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் வழங்கும் நியதிதோடு கட்டமைக்கப்பட்டிருக்கிற இச்சமூக அமைப்பியலானது மனித குலத்திற்கே ஏற்பட்ட பெருந்துன்பம். இது ஒரு உளவியல் பெருந் துன்பம். ஒவ்வொருவரின் ஆழ் மனத்திலிருக்கும் உளச்சிக்கலின் வெளிப்பாடாக இப்பெருந்துன்பம் இன்னமும் தொடர்கிறது. இச்சிக்கலை சிக்மண்ட் ஃப்ராய்ட் வேறொரு கோணத்தில் முன் வைக்கிறார்.

மனிதனின் உள்ளத்தில் இருக்கும் இருமைவாத உள்ளுணர்ச்சிகளின் கோட்பாட்டின் படி, அதாவது வாழ்வு – சாவு, காமம் – மூர்க்கம், ஆக்கம் அழிப்பு, இன்பம் – துன்பம் போன்ற இருநிலை எதிர் உணர்ச்சிகள் மனிதனின் நனவிலி மனத்தில் பொதிந்திருக்கின்றன. அதுவே உள இயக்கங்களின் பெரும் பகுதியை ஆளுமை செய்கின்றன. அதோடு குழந்தைப்பருவ பாலுணர்ச்சியில் ஏற்படும் தடைகள் உளச்சிக்கல்களை ஏற்படுத்தும் காரணிகளாக மாறிவிடுகின்றன. இவையே ஒரு தனி மனிதனின் உளப்பண்புகளை அமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்கிறார் ஃப்ராய்ட்.

Sigmund, Sigment, Sikment, Freud-in, Froyidin, Froydin, Ulaviyal, Ulaviyyal, Ulavial, Kodpadugal, Kotpaadugal, Kodpadu, Or, Oar, Ohr, Eliya, Ealiya, Elia, Arimugam, Arimukam, Arimugam, Ravisundram, Karuppu Pirathigal

Additional information

Weight 0.15 g
Dimensions 0.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

72

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சிக்மெண்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள் – ஓர் எளிய அறிமுகம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories