சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள்
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Description
கடலூர் மாவட்டமே வெள்ளைப் பரங்கியர் இப்பாரத தேசத்தை அடிமைப்படுத்திட வைக்க முதல் பாதையை அமைத்தது எனலாம். வங்கக் கடலின் மடியில் அமைந்துள்ள தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு அன்னிய நாட்டு கப்பல்கள் வந்து நின்றன. அவற்றில் இருந்து டச்சுக்காரர்கள் வெளியேறி பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். இவர்களது காலடி சுவடுகள் கடற்கரை ஓரமாக கோட்டை கட்டி அமரவும் வைத்தது. அப்போது தென்னாற்காடு மாவட்டம் விஜயநகர பேரரசரின் ஆளுமையின் கீழ் இருந்து வந்தது.
விஜயநகர பேரரசு படைகளின் தொடர் தாக்குதல்களாலும், அடிக்கடி உருவாகிய நெருக்கடிகளாலும் டச்சுக் காரர்கள் அந்த கோட்டையை போர்ச்சுக்கீசியர்களிடம் தாரை வார்த்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கோட்டையை டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டனர். அதே கடலூரில் வியாபாரம் செய்வதற்காக வந்திருப்பதாகச் சொல்லி காலடி எடுத்த வைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியினர். அவர்கள் டச்சுக்காரர்களிடம் இருந்த கோட்டையை விலைக்கு வாங்கி விரிவு படுத்திக் கட்டி அதை புனித டேவிட் கோட்டை என்று பெயர் சூட்டினார்கள்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN | 9788199896727 |



Reviews
There are no reviews yet.