ஜெயகாந்தன் கவிதைகள்

Original price was: ₹250.00.Current price is: ₹237.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“எழுத்தாளனுக்கு அவனுக்கே உரிய பணி இருக்கிறது. இது அவருடைய சிந்தனைச் சுதந்திரத்தைக் காட்டுகிறது. கவிமனத்தின் அகத்தைப் புலப்படுத்துகிறது. சமுதாய மாற்றம் இனி உருவாக வேண்டுமே என்ற எண்ணத்தை முன்வைக்கிறது.”
– குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம்
“மற்றவர்கள் தங்களைத் தவறாக நினைக்கக் கூடாது என்றும், மற்றவர்களின் அடைந்துவிடக் கூடாது எண்ணியே எந்நாளும் மதிப்பீட்டில் தாம் வீழ்ச்சி என்றும், மற்றவர்களை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையில், தனக்கு உண்மையாக வாழ்வதே முறையான வாழ்க்கையாகும் என்று வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன்.’
– உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்
“சிறுகதைகளும் நாவல்களும் முழுமையாக ஈர்த்துக் கொண்ட படைப்புத் திறனை கவிதை விட்டுவிடவில்லை. ஆயினும் கவிதைகள் அளவில் குறைவுதான். ஆனாலும் என்ன? பெருங்கவிஞர்கள் தொடாத இடங்களைத் தொட்டுப் பார்க்கிறது ஜே.கே.யின் மண் சுமந்த பாடல்கள். பாடல்கள் என்று குறிப்பிடுவதன் காரணம் அவை பெரும்பாலும் பாடும்படியாகவே அமைந்துள்ளன.” இசையுடன்
– கவிஞர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம்
“கவிதைக்கும் ஓவியத்துக்கும், கவிதைக்கும் சிற்பத்துக்கும், கவிதைக்கும் நாட்டியத்துக்கும், கவிதைக்கும் காட்சிக்கும் உள்ள பிரிக்கவொண்ணா உறவு போன்றது கவிதைக்கும் ஜெயகாந்தனுக்கும் உள்ள உறவு.”
– தொகுப்பாசிரியர் எழுத்தாளர் பி.ச. குப்புசாமி
“எம்.பி. சீனிவாசன் என்றொரு இசைமேதை, கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இருந்தார். அவர்தான் என்னைப் பாடல் எழுதத் தூண்டியவர். அந்தப் பாடல்கள் எனக்குத் திருப்தி அளிக்காவிடினும் பிரபலமடைந்தன. ‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தில் வெளிவந்த ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே, தென்றலில் நீந்திடும் ஓலையிலே’ என்னும் பாட்டு. மற்றுமொன்று இப்போதும் சென்னை சேர்ந்திசைக் குழுவினர் இசைக்கும் ‘பொன்னிவள நாடே!’ என்னும் பாட்டு தமிழறிந்தோர் இதற்காக என்னை மன்னிப்பார்கள்”
“எனக்கு வெண்பா என்றாலும், விருத்தப்பா என்றாலும் ஏன் கவிதை என்றாலே பாரதிதான் கட்டளைக் கல்! மற்றவர்கள் கதை எப்படியோ? என்னுடைய கவிதைகள் குழந்தைகள் விளையாடும் ஏழாங்காய்க் கற்கள்தாம்! தமிழறிந்த புலவர் பெருமக்கள் இந்த அத்துமீறலுக்காக என்னை மன்னிப்பார்களாக!”
– ஜெயகாந்தன்

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

224

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஜெயகாந்தன் கவிதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories